Aurora: பிக் பாஸ் பேச பேச.. உடைந்து அழுத அரோரா..என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நாளை நடைபெற உள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களாக நான்கு பேர் இருக்கின்றனர். இந்த சீசன் 9ல் டைட்டிலை வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில், பிக் பாஸ் தொடங்கிய நான்கு நாட்களிலேயே நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் வெளியேறினார். இதைத்தொடர்ந்து வைல்டு கார்ட் போட்டியாளராக அமீத், திவ்யா, பிரஜன், சாண்ரா என நான்கு போட்டியாளர்கள் வந்தனர்.
பிக் பாஸ் சீசன் 9: இந்த சீசனில் பார்வதியில்லாமல் ஒரு ப்ரோமோவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆட்டத்தை சிறப்பாக விளையாட்டு வந்தார் பார்வதி. ஒரு கட்டத்தில் பார்வதி, கம்ருதீன் இடையே காதல் வளர கடைசியில் அதுவே இருவருக்கும் வினையாக அமைந்துவிட்டது. டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்கின் போது, பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சாண்ட்ராவை எட்டி உதைத்தனர். இதனால், இருவருக்குமே ரெட் கார்டு கொடுக்கப்பட்டு இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கானா வினோத் வெளியேறினார் : இதையடுத்து, இந்த சீசனின் டைட்டில் வின்னராக கானா வினோத் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 18 லட்ச ரூபாய் பணத்துடன் கானா வினோத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால், பைனல் போட்டியாளர்களாக அரோரா, திவ்யா, விக்ரம், சபரி என நான்கு போட்டியாளர்கள் உள்ளனர்.நாளை பினாலே நடைபெற இருக்கும் நிலையில், இன்று இறுதி போட்டியாளர்களின் பயண வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த ஒவ்வொரு போட்டியாளரும் கண் கலங்கினார். கடைசியாக அரோராவிற்கு பயண வீடியோ போட்டுக் காட்டப்பட்டது.
கதறி அழுத அரோரா: அப்போது பிக் பிக் பாஸ், அரோரா பற்றி சில விஷயங்களை பேசினார். இந்த வீட்டில் இத்தனை நாட்களாக இருக்க மாட்டேன் என்று நீங்களே நினைத்தீர்கள். ஆனால், இத்தனை நாட்கள் வரையும் நீங்கள் வந்து இருப்பதற்கு காரணம் மக்கள் தான். எனக்கு யாரும் இல்லை என வருத்தப்பட்டீங்க, ஆனால், மக்கள் ஒவ்வொருவரும் உங்களை அவர்களின் வீட்டு மகளாக ஏற்றுக் கொண்டனர் என கூறினார். இந்த வார்த்தையை கேட்டதுமே அரோரா குலுங்கி குலுங்கி கதற அழ ஆரம்பித்தார். அதற்கு காரணம் என்னவென்றால், பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் அரோவிற்கு வேறு ஒரு பெயர் இருந்தது. அந்த பெயரை போக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரோரா இந்த வீட்டிற்கு வந்தார் என அவரது தோழி வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் எனக்கு யாரும் இல்லை, என்னை பார்க்க யாரும் வரமாட்டார்கள் என அரோரா அவ்வப்போது வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால், பிக் பாஸ் அந்த வார்த்தையை சொன்னதும், முகத்தை மூடிக்கொண்டு அரோரா கதறி அழுதார். இதை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் உண்மையிலேயே கலங்கிப்போனார்கள். உண்மையில் அரோரா எப்போதும் டைட்டிலுக்காக விளையாடவில்லை, டைட்டிலுக்காக நான் யாரை கஷ்டப்படுத்த மாட்டேன் என பல நேரத்தில் மிகவும் பண்புடன் இருந்தார். அந்த பண்புதான் அவரை இறுதிவரை கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











