லேடீஸ் இன்னர் வேர்.. ஆபாசமாக பேசிய கம்ருதீன்.. உனக்கு அவ்வளவு தான் மரியாதை கொந்தளித்த அரோரா!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 60 நாட்களை கடந்துவிட்ட நிலையிலும் போட்டியாளர்கள் ஆட்டத்தை புரிந்து கொள்ளாமல் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி நல்லா விளையாடுங்க என்று சொல்லி சொல்லி அவரை ஓய்ந்து போய்விட்டார். ஒவ்வொருவரும் விளையாட்டை விளையாடாமல் தனிப்பட்ட முறையில் சண்டை போட்டு வருகின்றனர். வழக்கமாக எல்லா விஷயத்திற்கும் அமைதியாக இருக்கும் அரோரா, கம்ருதீனின் மோசமான பேச்சால் இன்று கொந்தளித்து விட்டார்.
பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஆரோரா துஷாராவுடன் நெருங்கி பழகினார். அந்த நேரத்தில் கம்ருதீன் அரோராவுடன் பேச முயற்சி செய்த போதும் ஆரோரா அதற்கு இடம் கொடுக்காமல் இருந்தார். பின் துஷாரா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு அரோரா கம்ருதீனுடன் அந்த வீட்டில் ஜோடியாக சுற்றி வந்ததை பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அரோராவிடம் இருந்து விலகிய கம்ருதீன், பார்வதி பக்கம் சாய்ந்தார். இதை அரோரா பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது பார்வதிக்கும் அரோராவிற்கும் இடையே சின்ன சின்ன சண்டைகள் வந்தன.

பிக் பாஸ் சீசன் 9: இதைப்பற்றிய தெளிவாகப் பேசிவிடலாம் என பார்வதி, அரோராவிடம் பேசினார். அப்போது அரோரா நீங்கள் என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள் எனக்கு பிரச்சனை இல்லை, நீங்கள் வெளியில் போய் கல்யாணம் செய்து கொண்டாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. அது உங்களுடைய விருப்பம் என்றார். அதேபோல, கம்ருதீனிடம் பேசிய அரோரா, நீங்கள் பார்வதியுடன் பேசுவதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால், அது எனக்கு இரிட்டேடாகிறது. நீங்கள் பார்வதியுடன் பேசுவதாக இருந்தால், உங்களுடைய நட்பை எனக்கு தேவையில்லை எனக்கு இங்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என சொல்லிவிட்டு கம்ருதீனினுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
கொந்தளித்த அரோரா: இதனால் இருவருக்கும் இடையே புகைந்து கொண்டு இருந்த சண்டை, இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அராரோவை வேண்டுமென்றே வம்பு இழுத்த கம்ருதீன், துஷார் வெளியில் போனதற்கு நீ தான் காரணம் என பேசினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அரோரா, மீண்டும் மீண்டும் துஷார் பற்றி பேசாதீர்கள். அந்த விஷயத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். உங்களுக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் அதைப்பற்றி நேரடியாக என்னிடம் பேசுங்கள். துஷார் பற்றி பேசாதீர்கள், எனக்கு துஷாரை ரொம்ப பிடிக்கும் என்று உங்களுக்கு தெரியாத, ஏன் அவன் வெளியில் போனதற்கு நான் தான் காரணம் என சொல்கிறீர்கள் என அழுதார்.
இதைத்தொடர்ந்து, டாஸ்க்கிற்காக அரோரா, கம்ருதீனுக்கு கம்மல் போன்ற சில விஷயங்களை கொடுத்திருந்தார். அதை திருப்பி கொடுத்த கம்ருதீன், ஜட்டியை வேறு எதாவது எனக்கு கொடுத்தீங்களா என அரோராவின் முகத்திற்கு நேராகவே கேட்டுவிட்டார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அமித் கடுப்பாகி என்ன பேசுறீங்க கம்ருதீன் என்று கேட்க, நான் சரியாகத்தான் பேசுகிறேன் என்றார். அப்போது, அரோரா இவ்வளவு தான் உனக்கு மரியாதை இதற்கு மேல எதுவும் பேசாதே என்று சண்டை போட வீடே இரண்டாக மாறியது.


Click it and Unblock the Notifications











