9 வருட காத்திருப்பு.. முதல் முறையாக அம்மா என்று அழைத்த பிரியன்.. சரிகமபவில் நடந்த மேஜிக்!
சென்னை: 9 வருடங்களாக அம்மா என அழைக்காத ப்ரியன் சரிகமப நிகழ்ச்சி மூலம் முதன்முறையாக அம்மா என அழைத்து அவரது தாயை சந்தோஷத்தில் ஆழ்த்திய மேஜிக் தருணம் நடைபெற்றுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் சென்னையை சேர்ந்த ஆட்டிசம் குறைபாடு உடைய 9 வயது சிறுவன் ப்ரியனும் இந்த நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.

ஆட்டிசம் குறைபாடு இருந்தாலும்: ஆட்டிசம் குறைபாடு உடைய சிறுவனான ப்ரியனுக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம் என்பதால் நடுவர்கள் அவரை போட்டியில்லாத நபராக தேர்வு செய்துள்ளனர். சிங்கிள் மதராக அவரது அம்மா பிரியனை வளர்த்து வரும் நிலையில் மெகா ஆடிசன் போதே அவர் இதுவரை என் பையன் ஒருமுறை கூட தன்னை அம்மா என்று அழைத்தது இல்லை என்று உருக்கமாக பேசினார்.
அம்மா என அழைத்த ப்ரியன்: இப்படியான நிலையில் ப்ரியனின் நடவடிக்கையில் சரிகமப நிகழ்ச்சிக்கு பிறகு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார், இதே மேடையில் பிரியன் அவரை அம்மா என்று அழைக்க முதல் முறையாக இந்த வார்த்தையை கேட்ட அவர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
மேலும் சரிகமப செட்டில் யாரவது அழுதால் பிரியன் அழாத என்று அவர்களை ஆறுதல் கூறி சமாதானம் செய்வதாகவும் நிகழ்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர், ப்ரியனின் நடவடிக்கையில் சரிகமப செய்து வரும் மேஜிக் மறக்க முடியாத ஒன்று என அவரது அம்மா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சரிகமப நிகழ்ச்சி: அர்ச்சனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர், ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இந்த நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தனது பாட்டாலும், செயல்களாலும் சிறுவன் ப்ரியன் பலரது மனங்களை வென்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











