For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கலைஞர் டிவியில் ஏ.வி.எம்மின் மோகினி

  By Mayura Akilan
  |

  ஏ.வி.எம் நிறுவனம் மோகினி என்ற புத்தம் புதிய தொடரினை தயாரித்துள்ளது. இந்தத் தொடர் விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

  திரையுலகில் பல சாதனைகளைப் படைத்து இப்போது தனது முழு கவனத்தையும் சின்னத்திரை பக்கம் செலுத்தியிருக்கும் ஏவி.எம். புரொடெக்சன்ஸ் நிறுவனம் அடுத்து மீண்டும் தனது தொலைக்காட்சி தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது.

  சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.

  ஏ.வி.எம் டிவி சீரியல்கள்

  ஏ.வி.எம் டிவி சீரியல்கள்

  தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியைப் போலவே ஏ.வி.எம் நிறுவனத்தின் தொடர்களும் வளர்ச்சியடைந்துள்ளன என்றால் மிகையாகாது. 1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான 'ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.

  சன் டிவியில் ஏ.வி.எம்

  சன் டிவியில் ஏ.வி.எம்

  இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது. சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது.

  கலைஞர் டிவியில்

  கலைஞர் டிவியில்

  பின்னர் சூர்யா, ஜெமினி, ஆகிய தொலைக்காட்சிகளில் ஏராளமான தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.

  புதிய தொடர் மோகினி

  புதிய தொடர் மோகினி

  இப்போது மோகினி என்ற புதிய தொடரினை கலைஞர் டிவிக்காக தயாரிக்கிறது ஏ.வி.எம் நிறுவனம். மோகினி' என்ற இந்தத் தொடர்... வழக்கமான நெடுந்தொடராக இல்லாமல், நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அல்லாமல், மாமியார்-மருமகள் சண்டை சச்சரவுகள் இல்லாமல்.. அழுது வடியும் கதாபாத்திரங்களே இல்லாமல்... முற்றிலும் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாம்

  குடும்ப பாசத் தொடர்

  குடும்ப பாசத் தொடர்

  புதிய கண்ணோட்டத்தில்.. நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து.. சஸ்பென்ஸ், திரில்லர், குடும்பப் பாசம், திகைப்பு, வியப்பு என்று ரசனையின் அனைத்துவித வடிவங்களுக்கும் வேலை கொடுக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  நடிகர், நடிகைகள்

  நடிகர், நடிகைகள்

  இத்தொடரில் ராஜா, சிவரஞ்சனி, பெரோஸ்கான், ஸ்ரீபிரியா, சரத்குமார், சுஜாதா, சஞ்சய் குமார், யமுனா என்று தற்போதைய சின்னத்திரை உலகத்தின் முக்கிய நடிகர், நடிகைகள் பலரும் நடிக்கவிருக்கிறார்கள்.

  வைரமுத்து பாடல்

  வைரமுத்து பாடல்

  ரமணி பரத்வாஜின் இசைக்கு ஏவி.எம்.மின் ஆஸ்தான கவிஞர் ‘கவிப்பேரரசு' வைரமுத்து டைட்டில் பாடல் எழுதியுள்ளார். இதனை ‘பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். விநாயகமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

  மோகினி வித்தியாசமானவள்

  மோகினி வித்தியாசமானவள்

  ஒவ்வொரு வாரமும் அடுத்தது என்ன என்று ரசிகர்களை ஒரு கணம் நினைக்க வைக்கும் அளவுக்கு, இத்தொடரின் திரைக்கதை மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது. இத்தொடரின் கதாநாயகி மோகினியின் கதாபாத்திரத்தை வேறு எங்குமே நீங்கள் சந்தித்திருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்கிறார்..." இத்தொடரின் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவான ‘கலைமாமணி' சேக்கிழார்.

  முதல்நாளிலேயே

  முதல்நாளிலேயே

  "அம்மா-அப்பாவின் பாசமான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு தனது காதலனை கைவிட்டுவிட்டு காதலனின் நண்பனை கரம் பிடிக்கிறாள் கதாநாயகி மோகினி. அவர்களின் முதல் இரவில் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்துவிடுகிறது.. அதுதான் இந்தக் கதையின் அச்சாணி.. அது நிச்சயம் டிவி நேயர்கள் ஊகிக்க முடியாத ஒரு விஷயம்..." என்கிறார் கதாசிரியர் சேக்கிழார்.

  புகுந்த வீடு

  புகுந்த வீடு

  "இதன் பிறகு மோகினியின் புகுந்த வீட்டில் நடக்கும் மாற்றங்கள்தான் தொடரின் வேகத்தை கூட்டப் போகிறது.. அந்த சம்பவங்கள் அனைத்துமே அன்றாடம் நமது வீடுகளில் நடப்பதுதான். நம்மையறியாமலேயே நாம் இதையெல்லாம் கடந்து செல்கிறோமோ என்று வீட்டில் இருப்பவர்களையே ஒரு நிமிடம் யோசிக்க வைக்கப் போகிறது இத்தொடரின் திரைக்கதை என்கிறார் இயக்குநர்.

  வெற்றித் தொடர்

  வெற்றித் தொடர்

  அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் மோகினியில் இருக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை நிச்சயம் வியக்க வைப்பார்கள்.. சந்தோஷப்பட வைப்பார்கள்.. ஏவி.எம். நிறுவனத்திற்கு மேலும் ஒரு வெற்றியை இத்தொடர் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை..." என்கிறார் இயக்குநர் ஆர்.கே.பி.

  English summary
  AVM productions new serial Mohini will telecast on Kalaignar TV
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X