Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல், எல்லை மீறிய காட்சிகளால் அனல் பறக்குது. என்னதான் இருந்தாலும் சிறியவர் பெரியவரை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். கதையில் வருவதுதானே என்று ஒதுக்கிவிட மனம் இல்லை.

வக்கீல் தேவராஜ், தாத்தாவை அடித்து விட்டார் என்று, பதிலுக்கு பாக்கியலட்சுமி தேவராஜின் கன்னத்தில் அறைவது விபரீதத்தை உச்சம். தேவராஜின் சட்டையை பிடித்து உலுக்கி அடுத்த நொடியே தன்னிலை வந்திருக்கும் நிலையில், அதையும் மீறி அவரை அடிப்பது என்பது சின்ன பெண்களுக்கு எந்த மாதிரி மன நிலை இருக்கும் என்று தீர்மானிக்க முடியாதபடி பயம் வருகிறது.

இளைய தலை முறையினரை சரியான முறையில் கொண்டு செல்லும் பணியை ஊடங்கங்கள் ஒரு பொறுப்பாக எடுத்து செயல்படவில்லையோ என்கிற கவலை வருகிறது. இது போன்ற காட்சிகளைத் தவிர்த்து கதை அமைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

ரவி பாக்கியலட்சுமி

ரவி பாக்கியலட்சுமி

ரவி லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீட்டு பிள்ளை. இவர்கள் நடத்தும் லட்சுமி ஸ்டோர்ஸில் வேலை பார்க்கும் பாக்கிய லட்சுமி மீது ரவிக்கு காதல் வருது. அவளுக்கும் ரவி மீது காதல் வந்தாலும், தாத்தாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் காதலை ஏற்க மறுக்கிறாள், பக்குவப் பட்ட பெண்ணாக பாக்கியலட்சுமி இருக்கிறாள். எதிர்பாராத விதமாக பீச்சில் சில ரவுடிகள் செய்யும் கலாட்டாவால் ரவி, பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்ட நேர்ந்து விடுகிறது.

தாத்தாவிடம் பொய்

தாத்தாவிடம் பொய்

பாக்கியலட்சுமி இதை தாத்தாவிடம் மறைக்காமல் சொல்லிவிடுகிறாள்,இதனால், கோவமான தாத்தா அடுத்த நொடியே சமாதானம் ஆகிவிடுகிறார் என்று காண்பிக்கிறார்கள். இதிலேயே கதையின் சீரியஸ் தன்மை அடிபட்டு போகிறது. மகாம்மா கிட்ட சொல்லிடுன்னு சொல்ற தாத்தா மகாவைப் பார்த்து தனியாகப் பேசாமல் சின்ன பிள்ளைகளை நம்பி அவர்களை மட்டும் பேச சொல்லியதில் என்ன பெரியவர் தன்மை இருக்கிறது? அவரின் வயதுக்கு இப்படி செய்து இருக்கலாமா? துடிப்புடன் இவரல்லவா மகாம்மாவிடம் சென்று பேச்சு நடத்தி இருக்க வேண்டும்.

திருமணத்தை பதிவு

திருமணத்தை பதிவு

திருமணத்தை பதிவு செய்துவிட வேண்டும் என்று ரவி முடிவு செய்வதற்கும், பாக்கிய லட்சுமிதான் காரணம். ரவியுடன் பேசாமல் அவனைத் தவிர்க்க, ரவி இயலாமையின் உச்சத்துக்கு போயி, பேசாமல் பதிவுத் திருமணம் செய்துக்கலாம்.வீட்டுக்கு தெரியாமல் என்று முடிவு செய்யறான், ஆனால், பாக்கிய லட்சுமி மட்டும் தாத்தாவை அழைச்சுக்கிட்டு வருவேன்னு சொல்லிட்டு, தங்கை தாத்தாவுடன் வர்றா. இதைத் தவிர்த்து இருக்காலேமே.அந்த அளவுக்கு தாத்தாவிடம் உண்மையாக இருக்கும் பாக்கியலட்சுமி, தேஜாவுடன் ரவிக்கு நிச்சயம் ஆகிவிட்ட விஷயத்தை தாத்தாவிடம் சொல்லாமல் விட்டது எதனால்?. இதெல்லாம் இடிக்குது.

பாக்கியலட்சுமி தேவராஜ்

பாக்கியலட்சுமி தேவராஜ்

பதிவுத் திருமணம் செய்துகொள்ளப் போகிறான் தம்பி ரவி என்று தெரிந்ததும், இன்னொரு தம்பி மனைவியான உமாவுடன் பதிவுத் திருமணம் அலுவலகத்துக்கு கோபத்துடன் வர்றார் தேவராஜ். கடைசிவரை மகாலட்சுமி வருவாங்கன்னு பாக்கியலட்சுமியின் தங்கை தாத்தாவிடம் பொய் சொல்ல, அந்த பொய்யை பாக்கியலட்சுமி அக்செப்ட் பணிக்கொண்டது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? அப்போதே தாத்தாவிடம் உண்மையாய் இருப்பவள் அதையும் சொல்லிவிட வேண்டியதுதானே?

மதிப்பு மகாக்கா

மதிப்பு மகாக்கா

தேவராஜ் கோவத்தில் கத்த, மகாம்மா வரலையான்னு கேட்க, மகாவுக்கு இந்த விஷயம் தெரியும்னு நினைச்சுகிட்டு, உமாவும், தேவராஜும் விக்கித்து நிற்க,அப்போதாவது உண்மை விளம்பி பாக்கியலட்சுமி மகாக்காவுக்கு தெரியாதுன்னு மகாவைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா? வீணாக தங்கை தேவராஜிடம் எதிர்த்து பேச, அவளை அடிக்க வந்த தேவராஜின் கை தாத்தாவின் மேல் பட்டுவிட, பாக்கியலட்சுமி வெகுண்டெழுந்து, தேவராஜின் சட்டையைப் பிடித்து உலுக்க, அதோடு நின்றிருக்க வேண்டாமா? அவள் அவ்வளவு பெரிய மனுஷனை அவதானித்தும் அறை விட்டு இருக்க வேண்டுமா?

பதறுதுங்க... இது போல முன்னுக்குப் பின் முரணாக காட்சிகளை அமைக்காதீர்கள்.தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல, தேவ்ராஜும், உமாவும் வந்த உடனே ரவியை அல்லவா இவர்களில் யாராவது அழைத்திருக்க வேண்டும்... பாக்கிய லட்சுமி மகாக்காவுக்கு கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X