அயலி வெப் தொடரை பார்க்க மிஸ் பண்ணிட்டாங்களா? ஜீ தமிழ் பாருங்க.. எப்போ தெரியுமா ?
சென்னை: ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அயலி வெப் தொடர் தற்போது திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பெண் கல்வி, மூடநம்பிக்கை, குழந்தைத் திருமணத்திற்காக நடக்கும் கல்வி இடை நிற்றல்கள், மாதவிடாயைப் பற்றிய மூட நம்பிக்கைகள் என ஒவ்வொரு கருத்திற்கு தகுந்தாற் போல காட்சி அமைப்புக்களை செதுக்கி இருந்தார் இயக்குநர்.
அயலி வெப்தொடர்: Zee5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த வெப் தொடர் 'அயலி'. இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபி நட்சத்திரா நடித்திருந்தார். மேலும், லிங்கா, சிங்கம்புலி, அருவி மதன், அனுமோள், காயத்ரி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மூட நம்பிக்கை: பெண்களை, வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வாழும் கிராமத்தில், டாக்டராக வேண்டும் என்ற கனவை தமிழ்ச் செல்வி என்ற மாணவி எப்படி சாத்தியப்படுத்தினாள் என்பதே இந்த சீரிஸின் கதை. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் அனைவர் மனதிலும் இடம் பிடித்தது. அயலி தொடர் சிந்திக்கவும் சிரிக்கவும் செய்வதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்து திரையுலகம் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களும் அத்தொடரை பாராட்டினார்கள்.
டிவியில் அயலி: ஜீ5 தளத்தில் வெளியாகி ரசிகர்களை மனதை கவர்ந்த அயலி வெப் தொடர் தற்போது திரைப்படமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வரும் 8ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்10-ம் தேதி ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு அயலி வெப் தொடர் திரைப்படமாக ஒளிபரப்பாக இருக்கிறது. Zee5 ஓடிடி தளத்தில் படத்தை தவறவிட்ட ரசிகர்கள் டிவியில் இதைப் பார்த்து மகிலாம்.


Click it and Unblock the Notifications











