Ayudha ezhuthu serial: காளி அம்மாவா? கலெக்டர் அம்மாவா?

சென்னை: விஜய் டிவியில் ஆயுத எழுத்து புது சீரியல் கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பாகி வருது. இந்திரா என்று ஒரு சப்கலெக்டர் புதிதாக ஒரு ஊருக்கு வருகிறார். இவர் எப்படி ஒரு சின்ன ஊருக்குள் இருக்கும் காளி அம்மாவை குறி வைக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

காளி அம்மாவாக நடிகை மவுனிகா புது கெட்டப்பில் வருகிறார். அவரது சேலை கட்டும், பெரிய பொட்டும் , அதிகாரத் தோரணை பேச்சும் ரசிக்கும்படி நன்றாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்காகவே காத்திருந்தவர் போல நடிப்பில் அசத்துகிறார்.

சப்கலெக்டர் இந்திராவாக பொருத்தமான ஒரு புதுப்பெண் நடித்து வருகிறார். காளி அம்மாவை வந்து சந்தித்து, போட்டி சவால் எனறால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று இருவரும் பேசிக் கொள்கிறார்கள்.

காளி அம்மா எதுக்கு

காளி அம்மா எதுக்கு

அரசு பணிகளை காளி அம்மாவிடம் கேட்டுக்கொண்டால் செய்து கொடுத்து விடுவாராம். அதாவது, சாலை போடுவது, தூர் வாருவது என்பது போல. அரசு வேலைகளை நீங்கள் எதுக்கு பார்க்கறீங்க,? இதுவரைக்கும் இருந்த சப்கலெக்டர் எப்படி இருந்தாங்களோ தெரியாது, இனி நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்கன்னு சொல்லிட்டு கெத்தா போறா இந்திரா.

மகன் என்று தெரியாமல்

மகன் என்று தெரியாமல்

காளி அம்மாவின் மகன் சப்கலெக்டர் என்று தெரியாமலே, அவளை தனது இடத்துக்கு அழைத்துப் போகிறான்.அன்றே அவள்மீது அவனுக்கு காதலும் வந்துருது. வீட்டுக்கு இந்திரா வரும்போது, இவன் காளி அம்மாவின் மகன் என்று காண்பித்துக் கொள்ளாமல் மறைந்து இருக்கிறான். அவளும் வந்து பார்த்து சுமுகமாகப் பேசிவிட்டு போகிறாள்.

காளி அம்மா கேஸ்

காளி அம்மா கேஸ்

இந்திரா தனது அலுவலகத்துக்கு வந்து, காளி அம்மா பற்றிய கேஸ் குறிப்புக்கள் அடங்கிய ஃபைலை கேட்க, உதவியாளன் அடுக்கடுக்காக ஃபைலை கொண்டு வந்து வைக்கிறான்.நான் காளி அம்மா ஃபைல் மட்டும்தான் கேட்டேன்னு சொல்ல, இது எல்லாமே அவங்களோடதுதான் என்று அவன் சொல்கிறான்.ஐயோ அவ்வளவு பெரிய அம்மாவா... பார்த்துக்கலாம் என்று சொல்கிறாள் இந்திரா.

காளி அம்மா இந்திரா

காளி அம்மா இந்திரா

இந்திரா பக்கமும் பேச முடியாம, காளி அம்மாவையும் பகைத்துக் கொள்ளாமல், முக்கியஸ்தர்கள் காளி அம்மாவா, கலெக்டர் அம்மாவா என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால், காளி அம்மாவின் மகன் என்று தெரியாமல்தான் சப் கலெக்டர் இந்திரா அவரது மகனுடன் பழகறாங்களா, இல்லை அப்படி நடித்து வர்றாங்களான்னு தெரியவில்லை. போகப்போக தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X