Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பேம்பர்ஸ் போட்ட பாப்பாவா குயின்ஸி.. கோட்டா குழந்தையை அழ வைத்த அசீம்.. அடுத்த வாரம் இருக்கு!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடு காரசாரமாக அனல் பறக்கும் விவாதங்களுடன் அரங்கேறியதை பார்த்த ரசிகர்கள் இப்போதெல்லாம் வீக் டேஸ் ஷோவை விட வீக்கெண்ட் ஷோ நல்லா இருக்கே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் அசீமை வார வாரம் போட்டியாளர்கள் நாமினேட் செய்து வரும் நிலையில், குரூபிஸம் ஃபார்ம் ஆகிவிட்டது என கமல் முன்பாக புகார் கொடுக்க ஆரம்பித்த அசீம் குயின்ஸை பங்கமாக பப்ளிக்காக வெளுத்து வாங்கி விட்டார்.
இவ்வளவு வன்மத்தை இவ்ளோ நாளா எங்கே வச்சிருந்தீங்க அசீம் என ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் கேட்கும் அளவுக்கு குயின்ஸியை க்ளீன் போல்டாக்கி விட்டார்.

ஃபேவரிஸம் ஸ்டார்ட்
சோறு போட்ட ஆத்தாவா மறக்க முடியுமா என்பது போல சோறாக்கிப் போடும் ரச்சிதாவை யாருமே நாமினேட் செய்யாமல் வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஃபேவரிஸம் இருக்கு என அசீம் ஆரம்பித்து விட்டார். ரச்சிதா சேஃப் கேம் எல்லாம் விளையாடவில்லை என்றும், ரச்சிதா கேமே விளையாடவில்லை. வெறும் சமையல் அம்மாவாகவே உள்ளார் என கலாய்த்து தள்ளி விட்டார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
பிக் பாஸ் வீட்டில் வார வாரம் அசீம் பெயர் நாமினேஷனில் இடம்பெறுவதும் அவர் சேவ் ஆவதுமாக உள்ள நிலையில், கடந்த வாரம் கடைசி நபராக சேவ் செய்யப்பட்டதும், இந்த வீட்டில் ஃபேவரிஸம், குரூபிஸம் இருக்கு என்றும் 2 அணிகள் செயல்படுகின்றன என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். நாமினேஷனில் அவர் ரச்சிதா மற்றும் குயின்ஸி வந்திருப்பார்கள் என்றார்.

பேம்பர்ட் குயின்ஸி
பேம்பர் போட்ட பாப்பாவாக குயின்ஸி பிக் பாஸ் வீட்டில் சொகுசு குழந்தையாக எந்தவொரு வேலையும் செய்யாமல் கோட்டா குயின்ஸியாக இருக்கிறார் என ஒரு லிஸ்ட் போட்டே அவர் மீதான குற்றச்சாட்டுக்களை அசீம் அடுக்கி விட்டார். குயின்ஸியின் முகம் அப்படியே டோட்டலாக மாறிவிட்டது. ராபர்ட் தனது மகளாக குயின்ஸியை பாவிக்க பலரும் குயின்ஸிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் பார்த்து கொள்வதாக போட்டுக் கொடுத்து விட்டார் அசீம்.

அந்த சோப்பு
சமையல் சோப்பு பிரச்சனை என்று சொல்லும் குயின்ஸி பாத்ரூம் சோப்பில் மட்டும் அவர் கைக்கு எந்த பாதிப்பும் வராதா என அசீம் ரொம்பவே ஓவராக சென்று குயின்ஸியை விடாமல் பர்சனல் அட்டாக் செய்ய அவர் பதிலுக்கு சமையல் சோப்பு பிஎச் லெவல் என கெமிஸ்ட்ரி பாடம் எல்லாம் எடுக்க ஆரம்பித்து விட்டார். கடைசியாக கிளவுஸ் கொடுத்தால் பாத்திரத்தை க்ளீன் பண்றேன் என ஒரே போடாக போட்டு விட்டார் குயின்ஸி.