நீ பாட்டுக்கு கத்திக்கிட்டு இரு.. அடங்காத மருமகளுக்கு அழகம்மையின் அசால்ட் ட்ரீட்மென்ட்!

சென்னை: அழகு சீரியலில் தன்பாட்டுக்கு கத்தும் பூரணாவை அழகம்மையின் குடும்பம் ஒரு பொருட்டாகவே கருதாமல் வேற மாதிரி ட்ரீட்மென்ட்டை ஆரம்பித்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்டிவியில் நாள்தோறும் திங்கள் முதல் சனிக் கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் அழகு. முன்பு இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பான இந்த சீரியல் ஜவ்வு மிட்டாய் போல் இழுத்து ரசிகர்களை போரடிக்க வைத்தது.

இதனால் ரேட்டிங் குறையவே சீரியலின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரசியமாக செல்கிறது சீரியல்.

தலையை காட்டும் ரேவதி

தலையை காட்டும் ரேவதி

மகனின் பெண் பார்க்கும் படலத்தில் கூட பங்கேற்காமல் சொந்த ஊருக்கு சென்று கிராமத்தில் பல நாட்களாய் டேரா போட்ட அழகம்மை கடந்த சில நாட்களாகதான் தலையை காட்டுகிறார்.

அரைத்த மாவையே..

அரைத்த மாவையே..

வந்த வேகத்தில் வீட்டுப்பிரச்சனைகளை பேசி முடித்த அழகம்மை பல முக்கிய காட்சிகளில் காணாமல் போய்விடுகிறார். சீரியல் சுவாரசியமாக சென்றாலும், பூரணா சுதாவையும் அழகம்மை குடும்பத்தையும் பழிவாங்க மாஸ்டர் ப்ளான் போடுவதெல்லாம் அரைத்த மாவையே அரைப்பது போல் உள்ளது.

விபத்தில் சிக்கிய பூரணா

விபத்தில் சிக்கிய பூரணா

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஏதேதோ யோசித்து டென்ஷனில் வேகமாக காரை ஓட்டிச்சென்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கினார் அழகம்மையின் இளைய மருமகளான பூரணா.

பிரியாவும் மகேஷும்

பிரியாவும் மகேஷும்

கூட்டம் கூடியிருப்பதை பார்த்து வேடிக்கை பார்க்க போன பிரியா அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மகேஷுக்கும் தகவல் அளித்தார். பிரியாவும் மகேஷும் ஹாஸ்பிட்டலில் பேசிக்கொண்டிருந்தனர்.

பிரியாவை அழைத்த மகேஷ்

பிரியாவை அழைத்த மகேஷ்

அப்போது மயக்கம் தெளிந்து எழுந்து வந்த பூரணா , இருவரையும் சேர்த்து வைத்து பழையப்படி வசைப்பாடத்தொடங்கினார். அதற்கு தக்கபதிலடி கொடுத்துவிட்டு பிரியாவை அழைத்து சென்றார் மகேஷ்.

நிச்சயதார்த்த விஷயங்கள்

நிச்சயதார்த்த விஷயங்கள்

இதனால் டென்ஷனான பூரணா, நேராக வீட்டிற்கு வந்து தாம் தூம் என கத்துகிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாத அழகம்மை மற்றும் அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்த விஷயங்களை பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கொசு அடித்த மாமனார்

கொசு அடித்த மாமனார்

அழகம்மையும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என அசால்ட்டாக சொல்கிறார். தொடர்ந்து பூரணா கத்த இந்த கொசு தொல்லை தாங்க முடியல என்பதை போல கொசு அடித்தார் மாமனார் பழனிச்சாமி.

நல்ல ட்ரீட்மென்ட்

நல்ல ட்ரீட்மென்ட்

திருநா, மகேஷ், ரவி என ஆளாளுக்கு பூரணாவை கொஞ்சம் கன்ஸிடர் பண்ணாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். பூரணாவுக்கு கத்துவதும், அடுத்தவர் சந்தோஷத்தை கெடுப்பதும் புதிதல்ல. இதனை சரியாக புரிந்துகொண்ட அழகம்மை பக்கா ட்ரீட்மென்டை ஆரம்பித்திருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர் வலைதள வாசிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X