நீட் எக்ஸாம் எழுதலை...காதலனை கைப் பிடிச்சாச்சு... ரவுடிங்க கையில் மாட்டியாச்சு....!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் அழகம்மை தன் சின்ன பொண்ணோட காதலுக்கு சப்போர்ட் பண்றது கொஞ்சம் முகம் சுளிக்கத்தான் வைக்குது.
வருஷம் முழுவதும் நீட் நீட்னு காவ்யாவை தயார் பண்ணிட்டு, டாக்டர் கனவுல குடும்பமே மிதக்குது. இதனால பணம் எல்லாம் குடுத்து கூட அழகம்மை குடும்பம் ஏமாந்து இருக்காங்க.
குடுமப்த்தில் நல்லா படிக்கற பொண்ணு காவ்யா... அதனால அவளை டாக்டருக்கு படிக்க வைக்க குடும்பமே எல்லா விதத்திலும் ஒத்தாசை பண்றாங்க. ஊக்கம் கொடுக்கறாங்க...

காவ்யா காதல்
இந்த சமயத்துல காவ்யா மதனை காதலிக்கறதுக்கும் வீட்டில் ஓகே சொல்றாங்க. கல்யாண மேடை வரை போயி, கல்யாணம் நின்னு போனபோதும் காவ்யாவை முறையா அழகம்மை கண்டிக்கலை.

உண்மையான காதல்னா
வீட்டுக்கு வந்தும் மகள் காவ்யாவை கண்டிக்காமல், படிக்கணும்.. அதுதான் குடும்பத்தின் ஆசை என்றும் அறிவுரை சொல்லாமல்...மடியில படுக்க வச்சுக்கிட்டு, உண்மையான காதல்னா உங்க ரெண்டு பேரையும் அது சேர்த்து வைக்கும்னு சொல்றது அபத்தமா இருக்கு.

வேற பொண்ணை மதனுக்கு
வேற பொண்ணை மதனுக்கு சகுந்தலா தேவி கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்த போதும். குடும்பமே போயி காவ்யாவுக்காக சகுந்தலா தேவியிடம் கெஞ்சறாங்களே தவிர,காதலாவது ஒண்ணாவது.. ஒழுங்கா படிக்கற வேலையைப் பாருன்னு பொண்ணை கண்டிக்கலை.
இது மற்ற பெண்களுக்கு பெரிய உதாரணமா ஆகிடாதா...இதை கதையாக தரும்போது பல விதத்திலும் யோசிக்க வேணாமா..

பதிவு திருமணம்
இதோ... இப்போ மதனும் காவ்யாவும் பதிவுத் திருமணம் செய்துக்கறாங்க. சகுந்தலாதேவி பிள்ளையைக் காணோம்னு அழறாங்க.மதனுக்கு பார்த்து வைத்திருந்த வைஷ்ணவியின் அப்பா மதனையும், காவ்யாவையும் கடத்திடறார்.
அழகம்மை... உண்மையான காதல்னு சொல்லி சொல்லியே பொண்ணை நல்லா வளர்த்து இருக்கீங்க...எல்லா தாய்களுக்கும் நீங்க முன் உதாரணம்!


Click it and Unblock the Notifications











