அழகிய சிநேகிதியில் தொகுப்பாளினியான நீலிமா ராணி

By Mayura Akilan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அழகிய சிநேகிதி என்ற பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நீலிமா ராணி.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா. அதன் பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். மெட்டிஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல சீரியல்களில் நடித்தார். மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார்.

அக்கா, அண்ணி,தோழி வேடங்கள்தான் கிடைத்தது. இதனால் வெறுத்துப்போனவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வாணி ராணியிலும், மகாபாரதத்திலும் நடித்து வருகிறார்.

இதுவரை நடிகையாக இருந்த நீலிமா தற்போது அழகிய சினேகிதி என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகியிருக்கிறார்.

இது பெண்களுக்கான நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்து அழகிய சினேகிதியாக வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.

அழகிய சிநேகிதி நிகழ்ச்சியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஆரோக்கிய அழகு, கைத்தொழில், தையற்கலை ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

ஆரோக்கிய அழகு

ஆரோக்கிய அழகு

வீட்டில் உள்ள அன்றாடம் சமைக்கப்பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நம்மை அழகு படுத்த கற்றுக்கொடுக்கின்றனர். எளிதான சிகிச்சையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

கைத்தொழில்

கைத்தொழில்

பொம்மை செய்தல், நகை தயாரிப்பு, வீட்டை அழகுப் படுத்துதல், குப்பை என்று நினைக்கும் பொருளையும் கூட அழகாக மாற்றுவது எப்படி என்று ஆர்ட் அன்டு கிராப் பகுதியில் கற்றுத் தருகின்றனர்.

பெண் தொழில்முனைவோர்கள்

பெண் தொழில்முனைவோர்கள்

ஆடை தயாரிப்பு பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க இந்த நிகழ்ச்சி உதவுகிறது.

நீலிமா ராணி

நீலிமா ராணி

சின்னத்திரை நடிகை நீலிமாராணி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தினசரி மதியம் 2.30 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

சந்தோச தொகுப்பாளினி

சந்தோச தொகுப்பாளினி

தொகுப்பாளினியாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. பல வாய்ப்புகள் வந்தபோதும் எனக்குள் இருந்த தயக்கத்தால் ஏற்கவில்லை. இப்போது துணிச்சலுடன் களம் இறங்கிவிட்டேன். இதை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் நீலிமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X