நடிகை ரேவதி... இருந்தும் ஏன் இப்படி?

சென்னை:சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதி, ஐஸ்வர்யா, காயத்ரி ஜெயராம்னு மூணு ஸ்டார் காஸ்ட் நடிகைகள் இருந்தும் சீரியல் மந்தமா இருக்கு.

ஒரே மாதிரி காட்சிகளே அடுத்தடுத்த எபிசோட்லயும் ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டு நிக்குது. ரேவதிக்கான முக்கியத்துவமும் குறைஞ்சுகிட்டே வருது.

azhagu serial loses its sheen

பூர்ணாவை பெத்த அம்மா அப்பா அவளுக்கு கிடைச்சுடறாங்க. அவ வளர்த்த அம்மாவையும், புகுந்த வீட்டையும் சுத்தமா ஒதுக்கிட்டு, லாயர் சகுந்தலா தேவி அதாவது நடிகை காயத்ரி ஜெயராம் வீட்டுக்கே போயிடறா.

திரும்பத் திரும்ப பூர்ணாவை கூப்பிட போறதும், அங்க அவகிட்டயும், அவங்க அம்மா சகுந்தலா தேவிகிட்டயும் அவமானப்பட்டு திரும்பி வர்றதே அழைகம்மை குடும்பத்தின் தலையாய வேலையா இருக்கு.

இதுக்கு நடுவுல பூர்ணா புருஷன் மகேஷ் குழந்தை வேணும்னு கூல் டிரிங்க்ல மயக்க மருந்தை குடுத்து பூர்ணாவை கர்ப்பமாக்கிடறான். கட்டின பொண்டாட்டியே ஆனாலும் இது தப்புதானே...

azhagu serial loses its sheen

இதை பத்தி எல்லாம் அழகம்மை குடும்பம் பெரிசா கவலைப்படலை.இன்னும் மாகேஷ் பூர்ணா ஒண்ணு சேரணும்.., பூர்ணாவை அழகம்மை வீட்டுக்கு கொண்டு வரணும்னுதான் திட்டம் போட்டுகிட்டு இருக்காங்க.

azhagu serial loses its sheen

இதுல பூர்ணா மனசை மாத்த பூர்ணா ஆஃபீஸுக்கே போயி மகேஷ் வேலைக்கு சேர்ந்துடறான். அவளும் அவனை வேலைக்கு சேர்த்துக்கறா..இப்படி சிறு பிள்ளைத்தனமா கதை போயிகிட்டு இருப்பது போரடிக்குது.

நடிகை ரேவதி கால்ஷீட்டை வீணாக்கிருவாங்க போலிருக்கே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X