Azhagu serial: அடடா...பூர்ணா செய்தது அவளையே தாக்கிருச்சே!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் ரவியை பூர்ணா மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவனை மன நோயாளியாகும் நிலைக்கு கொண்டு விந்திருக்கிறாள்.இதில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம்.
ரவி அத்தான் இனி மேல் சுதாவைத் தொட மாட்டார். இனி அவள் வாழக்கை அவ்வளவுதான் என்றும், இனி ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு வெற்றிதான் என்றும் பூர்ணா மகிழ்ச்சியில் இருக்கிறாள்.
சுதா, ரவியை குணப்படுத்திட வேண்டும் என்று, அவனை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறா. ரவியின் அம்மா அழகம்மைக்கு ரவிக்கு உண்மையாக என்ன நடந்தது என்பதை சொல்லாமல் இருந்திடலாம், இல்லேன்னா அம்மா பயப்படுவாங்கன்னு மாமனார் கூட சேர்ந்து முடிவு பண்ணிடறா.

ரவிக்கு சுரேந்தர் ஆவி
கிராமத்தில் தோப்பு குத்தகைக்கு எடுத்து இருக்கும் அலமேலு, மற்றும் சில பெரியவர்களை செட்டப் செய்து,, அவர்களுக்குள் ரவியின் நண்பன், சுதாவின் முதல் புருஷன் சுரேந்தரின் ஆவி அவர்களுக்குள் புகுந்து விட்டதாக நாடகமாடி, ரவியை பயமுறுத்த வைக்கிறாள். ரவி.. நீ உன் உடம்பை எனக்கு குடு..நான் சுதா கூட வாழணும்னு வசனம் பேச வைக்கிறாள்.கிராமத்தில் ரவி எங்கு போனாலும் இப்படி அவளை இவர்கள் தொந்திரவு செய்ய, ஒரு கட்டத்தில் ரவிக்கு மன நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது.

சுதா ரவியை
சுதா ரவியை காப்பாத்தி ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்து, அவனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கறா. பூர்ணா தோழியுடன் ஆஃபீசில் இருக்க, அவளும் தோழியும் நடத்தி முடித்த காரியத்தை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது பார்த்து கிராமத்தில் தோப்பை குத்தகைக்கு எடுத்த அலமேலு பூர்ணாவை சந்திக்க அங்கு வருகிறாள்.

எதுக்கு இங்கே?
எதுக்கு இங்கே வந்தே? உனக்குத்தான் குடுக்க வேண்டியது எல்லாமே குடுத்தாச்சுல்ல.. அப்புறம் என்னான்னு கேட்க, மேடம்..என்ன மேடம் நீங்க..எல்லாத்துக்கு குடுத்த மாதிரி எனக்கும் அஞ்சு பத்துன்னு குடுத்து காரியத்தை முடிச்சுக்கலாம்னு பார்க்கறீங்களான்னு கேட்கறா கிராமத்து பெண். சரி.. சுவாதி இன்னும் ஒரு பத்தாயிரம் குடுத்து அனுப்புன்னு பூர்ணா எழுந்திரிக்க, எங்கே மேடம் போறீங்க.உட்காருங்க. எனக்கு பத்து லட்சம் பணம் வேணும்னு சொல்ல பூர்ணாவும், தோழி சுவாதியும் அதிர்ச்சி ஆகிடறாங்க.

பெண்ணமணி மிரட்டல்
குடுக்கலேன்னா என்ன பண்ணுவேன்னு சுவாதி கேட்க,றா. நீங்க என்னை செய்ய சொன்னதை அப்படியே ரவி வீட்டில் போயி சொல்லிடுவேன்னு மிரட்டறா.. சரி, சாயங்காலம் ரெஸ்டா ரென்ட் வான்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் சாயங்காலம் போறாங்க. அங்கே இவள் ஓரு லட்சம் குடுக்க, அவள் பத்து லட்சம்தான் வேணும்னு கேட்க, கை நீட்டி விடுகிறாள் சுவாதி.பதிலுக்கு சுவாதியை அடிக்க வந்த அவளை பூர்ணாபிடிச்சு தள்ளிவிட, கிராமத்து பெண் அலமேலு கீழே விழுந்து,அங்கு இருந்த தடியான இரும்பு கம்பியில் விழுந்து மண்டையில் அடி பட்டுடுது.
சுவாதி அவளது நாசியில் விரல் வைத்து பார்த்து ஏய் செத்துட்டாடின்னு சொல்றா. பாருங்க...தன் வினை தன்னைச் சுடும்னு எப்படி சோதனை பாருங்க!


Click it and Unblock the Notifications











