azhagu serial: அர்ச்சனா தாலி ஈரம் காய்றதுக்குள்ள... திருநா நிவியை...!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் திருநா அர்ச்சனாவுக்கு தாலி கட்டின ஈரம் காயும் முன்பே நிவிக்கு தாலி கட்டி அழைச்சுட்டு வந்து நிக்கறான். மூத்த பையன் ரவி லஞ்சம் வாங்கின குற்றச்சாட்டில் கலங்கி நிக்கறான்.
இந்த நேரத்தில் அழகு சீரியலில் ஹைலைட்டாக பார்க்கப்படும் அழகம்மை நடிகை ரேவதி இல்லாமல் இருப்பது கதையின் ஓட்டத்துக்கு ஏற்றதாக இல்லை. முக்கிய நேரத்தில் இல்லாமல் எதற்காக அழகம்மை கதாபாத்திரம்?
ஒருவேளை ரேவதி இல்லாமல் இருப்பது நல்ல வசதியாய் போச்சு என்றுதான், திருநா இன்னொரு கல்யாணம் செய்துக்கொண்டு நிற்பது, பூர்ணா ரவியை மாட்டிவிடுவது என்று கதையை திசை திருப்பி கொண்டு போகிறாரோ இயக்குநர் என்று சீரியல் ஆர்வலர்கள் பேசிக்கறாங்க.

திருநா இப்படியா?
அர்ச்சனாவுடன் திருநாவுக்கு கல்யாணம் ஆகி, அவள் கழுத்தில் இருக்கும் மஞ்சள் தாலியின் ஈரம் கூட காய்ந்து இருக்காது அதற்குள், அவன் நிவியை கல்யாணம் செய்துகிட்டு வந்து நிக்கறான். அதுவும் அவளைத் துரத்திப் பிடிச்சுகிட்டு, இழுத்துகிட்டு தெருத்தெருவா ஓடி, கடைசியில் தாலியும் கட்டி வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டான்.

பட்ஜெட்டில் துண்டு
நடிக்க வைக்கும் நடிகர்களுக்கு சம்பளம் குடுத்து பட்ஜெட் கட்டுப்படியாகலை.. பட்ஜெட்டில் துண்டு விழுதுன்னு ரேவதியை முக்கிய கதாபாத்திரம் என்றாலும், கெஸ்ட் ரோல் மாதிரி நடிக்க வைக்கறீங்க. அவங்களை பார்த்து சீரியல் பார்க்க ஆன்னு உட்கார்ந்தவங்க வாயில வாழைப் பழத்தை திணிச்சாச்சு.

ரேவதிக்கு பேர் கெடும்
இப்போ ஒரு குடும்பமே எதுக்காக வீணா நடிக்கணும்.. அவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னு கதையை மாத்தி, திருநாவை கெட்டவனாக்கி, அர்ச்சனா குடும்பமே ஒதுங்கிக்கிட்ட மாதிரி கதையை கொண்டு போறீங்களே நிஜமா சகிக்கலை. ரேவதி நடிக்கும் சீரியல் கதை இவ்ளோ மோசமாவா இருக்கணும்? ரேவதியை நீங்க இந்த சீரியலில் நடிக்கவே வேணாம்னு ரசிகர்கள் சொல்ற அளவுக்கு கதையை கொண்டு போறீங்க.

தெய்வப்பிறவியா சுதா?
பூர்ணா எது செய்தாலும், நான் பார்த்துக்கறேன்.. அவளை நான் திருத்தறேன்னு சொல்றதுக்கு சுதா என்ன தெய்வப் பிறவியா? தங்கச்சியா இருந்தாலும் புருஷனை மாட்டிவிட்டு அவனை எங்கியோ ஒளிச்சு வச்சு இருக்கா. அப்போதும் இவளுக்கு கோவம் வரலை...புருஷனை எப்படி காப்பாத்தறதுன்னு எனக்குத் தெரியும்னு ஒரு தென்றல் புயலாய் வந்ததுன்னு கிளம்பறா. கடவுளே.. முடியலை!


Click it and Unblock the Notifications











