twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வளைகாப்பு விழாவில் கணவருடன் குத்தாட்டம் போட்ட பாக்யலட்சுமி சீரியல் நடிகை

    |

    சென்னை : பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகளான நடிகை ஜெனிஃபர், நந்திதா என்ற பெயரில் ஹீரோயினாக சில தமிழ் படங்களில் நடித்தார். பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆன ஜெனீஃபர், ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    Recommended Video

    கர்ப்பிணியாக குத்தாட்டம் போடும் Alya Manasa & Jenifer | Bakkiyalakshmi, Raja Rani

    பிறகு பட வாய்ப்புக்கள் குறைந்ததால், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து அயிட்டம் சாங் ஆடி பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஆடிய அயிட்டம் சாங்களில் பல ஹிட் ஆகி உள்ளன. அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

    நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!

    பாக்யலட்சுமி ராதிகா

    பாக்யலட்சுமி ராதிகா

    2013 ல் மீண்டும் தனது உண்மையான பெயரான ஜெனிஃபர் என்ற பெயரில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து, சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த பிறகு மிகவும் பிரபலமானார் ஜெனிஃபர். இவரின் சாந்தமாக முகம், அலட்டல் இல்லாத நடிப்பு பலரையும் கவர்ந்தது.

    கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

    கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

    இந்நிலையில் சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக ஜெனிஃபர் அறிவித்தார். தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலகுவதாக அவர் பிறகு விளக்கம் அளித்தார். ஜெனிஃபர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் ரேஷ்மா பசுபலாட்டி, ராதிகா கேரக்டரில் மாற்றப்பட்டு தற்போது நடித்து வருகிறார்.

     லிப்லாக் ஃபோட்டோஷுட்

    லிப்லாக் ஃபோட்டோஷுட்

    சீரியலில் இருந்து விலகினாலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பகாலத்தில் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் அழகிய ஃபோட்டோஷுட் நடத்தினார் ஜெனிஃபர். தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் - மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலானது.

    வளைகாப்பில் குத்தாட்டம்

    வளைகாப்பில் குத்தாட்டம்

    இந்நிலையில் நேற்று ஜெனீஃபருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோட்டோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, கணவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்த நிலையில் குத்தாட்டம் வேண்டாம் என்கிறார் அவரின் கணவர். அதற்கு ஜெனீஃபர், குத்தாட்டம் என்றால் என்னவென்று அனைவருக்கும் காட்டுவோம் என கூறுகிறார்.

    வைரலாகும் வீடியோ

    வைரலாகும் வீடியோ

    அதற்கு ஜெனீஃபரின் கணவரும், சரி இந்த நிலையில் ஆசைப்படுகிறாய். நிறைவேற்றிடலாம். குத்தாட்டம் போடலாம் என்கிறார். இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போடுகிறார்கள். இதை பார்த்து விட்டு ஏராளமானோர் லைக் செய்து, ஜெனீஃபரின் ஆட்டத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

    English summary
    Recently Baagyalakshmi serial actress Jennifer takes under water liplock photoshoot. now she took kutthattam with her husband with bumb on baby showering function. fans appreciate this attitude.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X