கர்ப்ப காலத்தில் நீருக்கு அடியில் லிப்லாக் முத்தம்... வைரலாகும் பாக்யலட்சுமி சீரியல் நடிகை ஃபோட்டோ

சென்னை : பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகளான நடிகை ஜெனிஃபர், நந்திதா என்ற பெயரில் ஹீரோயினாக சில தமிழ் படங்களில் நடித்தார். பாரதி ராஜாவின் ஈரநிலம், ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Recommended Video

Bakkiyalakshmi Radhika தரப்பு விளக்கம் | Jennifer, Amman, Sharadha

பிறகு பட வாய்ப்புக்கள் குறைந்ததால், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து அயிட்டம் சாங் ஆடி பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் ஆடிய அயிட்டம் சாங்களில் பல ஹிட் ஆகி உள்ளன. அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

பாக்யலட்சுமி ராதிகா

பாக்யலட்சுமி ராதிகா

2013 ல் மீண்டும் தனது உண்மையான பெயரான ஜெனிஃபர் என்ற சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து, சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த பிறகு மிகவும் பிரபலமானார் ஜெனிஃபர். இவரின் சாந்தமாக முகம், அலட்டல் இல்லாத நடிப்பு பலரையும் கவர்ந்தது.

கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

கர்ப்பத்தை அறிவித்த ஜெனிஃபர்

இந்நிலையில் சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக ஜெனிஃபர் அறிவித்தார். தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால், சீரியலில் இருந்து விலகுவதாக அவர் பிறகு விளக்கம் அளித்தார். ஜெனிஃபர் விலகியதை அடுத்து அவருக்கு பதில் ரேஷ்மா பசுபலாட்டி, ராதிகா கேரக்டரில் மாற்றப்பட்டு தற்போது நடித்து வருகிறார்.

லிப்லாக் ஃபோட்டோஷுட்

லிப்லாக் ஃபோட்டோஷுட்

சீரியல் இருந்து விலகினாலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். இந்நிலையில் கர்ப்பகாலத்தில் தண்ணீருக்கு அடியில் தனது கணவருடன் அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார் ஜெனிஃபர். தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் - மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலாகி வருகிறது.

வெண்பாவின் ஃபோட்டோஷுட்

வெண்பாவின் ஃபோட்டோஷுட்

இந்த ஃபோட்டோக்கள் இரண்டு மணி நேரத்திற்கும் 15,000 லைக்குகளை பெற்றுள்ளன. சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரீனா ஆசாத்தும் இதே போல் தண்ணீருக்கு அடியில் கர்ப்ப கால ஃபோட்டோஷுட் நடத்தினார். இந்த ஃபோட்டோக்களும் செம வைரலாகி பெரிய அளவில் பேசப்பட்டன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X