For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜோதிகா ஸ்டைலில் களமிறங்கும் பாக்யலட்சுமி...குவியும் ரசிகர்கள் ஆதரவு

  |

  சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிப்பாகும் சீரியல்களில் குடும்ப தலைவிகளின் முழு ஆதரவையும் பெற்ற சீரியல் பாக்யலட்சுமி. குடும்ப தலைவிகள் படும் கஷ்டங்கள், அவர்களின் உணர்வுகள், சாதிக்க துடிக்கும் குடும்ப தலைவிகள் சந்திக்கும் எதிர்ப்புக்கள் ஆகியவற்றை காட்டுவதாக பாக்யலட்சுமி சீரியல் பல பெண்களின் ஃபேவரைட் சீரியலாக உள்ளது.

  நான் என்ன டிரெஸ் போடணும்..போடக்கூடாதுன்னு எவனும் சொல்லமுடியாது.. நெட்டிசன்களை விளாசிய அமலா பால்! நான் என்ன டிரெஸ் போடணும்..போடக்கூடாதுன்னு எவனும் சொல்லமுடியாது.. நெட்டிசன்களை விளாசிய அமலா பால்!

  இடையில் கொஞ்சம் டிராக் மாறியது போன்ற காணப்பட்ட பாக்யலட்சுமி சீரியல் கதையின் போக்கு, மீண்டும் ஃபாமுக்கு திரும்பி உள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு முறையும் கோபி மாட்டிக் கொள்வதை போல் கொண்டு போய் கடைசி நிமிடத்தில் அவர் தப்பித்து விடுவது, ராதிகா உடனான சீன்கள், ஜெனி - செழியன் இடையேயான சண்டைகள் என கொஞ்சம் போரடித்தது.

  பாக்யாவை ஆதரிக்கும் எழில்

  பாக்யாவை ஆதரிக்கும் எழில்

  கடந்த சில வாரங்களாக லீட் ரோலான பாக்யாவை சுற்றி கதை திரும்பி உள்ளது. மகள் இனியாவின் பள்ளியில் சிறந்த அம்மா பரிசை பாக்யலட்சுமி பெறுவது. வீட்டில் உள்ளவர்களின் கேலி, எதிர்ப்பை மீறி 1000 பேருக்கான சமையல் ஆர்டரை ஒப்புக் கொள்வது, அதை செய்து முடிக்க பாக்யா எடுக்கும் முயற்சிகள், மகன் எழிலின் சப்போர்ட் என கதை சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

  ஜோதிகா ஸ்டைல் ஐடியா

  ஜோதிகா ஸ்டைல் ஐடியா

  மகன் எழில் கொடுத்த ஐடியா படி, 36 வயதினிலே படத்தில் ஜோதிகா செய்ததை போல் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களை உதவிக்கு அழைத்து சமையல் ஆர்டரை செய்து முடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் பாக்யா. கணவர் கோபியின் பேச்சை மீறி பாக்யா இந்த செயலில் இறங்கி, வெற்றியும் பெறுகிறார்.

  சாதிக்கும் பாக்யா

  சாதிக்கும் பாக்யா

  லேட்டஸ்ட்டாக வெளியாகி உள்ள ப்ரோமோவில், ஆளுக்கொரு உணவு என அக்கம் பக்கத்து வீட்டு பெண்களுடன் இணைந்து 1000 பேருக்கான சமையல் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் பாக்யா. உணவை சாப்பிட்டு பார்த்து பிசினஸ்மேன் ராஜசேகரும் பாக்யாவை பாராட்டுகிறார். இதனால் தனது டீமுடன், வாடி ராசாத்தி பாடல் பின்னணியில் ஒலிக்க கெத்தாக நடந்து வருகிறார் பாக்யலட்சுமி.

  குவியும் பாராட்டுக்கள்

  குவியும் பாராட்டுக்கள்

  இந்த ப்ரோமோ வெளியான பிறகு பாக்யலட்சுமி சீரியலின் டிஆர்பி உயர துவங்கி உள்ளது. இந்த காட்சி வரும் அபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், இதை கதையல்ல. சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் கனவு என பயங்கரமாக பாராட்டி வருகின்றனர். பெண்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் விதத்திலான இந்த சீரியலில் வரும் வசனங்கள், பலருக்கும் நிஜயத்திலும் ஊக்கமளிப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

  மனதை கவர்ந்த ப்ரோமோ

  மனதை கவர்ந்த ப்ரோமோ

  இதற்கு முன்பும் பாக்யலட்சுமி சீரியல் போரடிப்பதாக பலர் கூறிய போது, காலில் காயம் பட்ட நிலையிலும் ஓய்வெடுக்க முடியாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை பாக்யா செய்வதை போல் காட்டி, அனைவரின் கவனித்தையும் இந்த சீரியல் பக்கம் திருப்பினர். அம்மாக்களுக்கு என்னைக்குமே லீவ் கிடையாது என்ற டயலாக் அம்மாக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டது. தற்போது பல தடைகள், எதிர்ப்பை மீறி பாக்யா ஜெயித்துள்ளதாக மற்றொரு ப்ரோமோவை வெளியிட்டு மீண்டும் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளனர்.

  தனி ரசிகர்கள் கூட்டம்

  தனி ரசிகர்கள் கூட்டம்

  தங்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக பாக்யாவை பல குடும்ப பெண்கள் பார்ப்பதாலும், ஒரே விஷயத்தை வைத்தே எபிசோட்களை கடத்தாமல் அடுத்தடுத்து காட்சிகள் மாறிக் கொண்டே கதை நகர்வதாலும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

  English summary
  Baagyalakshmi serial latest promo shows that she succeeded in her first big catering project. she followed the foot steps of jyothika which she did in 36 vayadhinilae movie. fans appreciate and give support to baagyalakshmi promo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X