கோபியோட மனைவிதான் ஹாஸ்பிடல் பில் கட்டினாங்க.. ஆனா அது நான் இல்ல.. பொங்கிய பாக்கியா!
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் சேனலின் முன்னணி தொடராக காணப்படுகிறது.
Recommended Video
ரசிகர்களுக்கு தினந்தோறும் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.
காதல், குடும்பம் இரண்டு தரப்பினரையும் ஏமாற்றிவந்த கோபியின் குட்டு தற்போது இரு தரப்பினருக்கும் தெரியவந்துள்ளது.

விஜய் டிவி
விஜய் டிவியின் தொடர்கள் அனைத்தும் ரசிகர்களை வெகு சிறப்பாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் இந்த சேனலின் மிகவும் முக்கியமான தொடர்களாக இருந்து வருகின்றன. ரசிகர்கள் இந்தத் தொடர்களை மிகவும் விருப்பத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
இந்த சேனலின் முக்கியமான தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது. இதில் கோபி, பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகியோரை மையமாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்யாணம் ஆன பையனை வைத்துக் கொண்டு காதலில் ஈடுபடுகிறார் கதையின் நாயகன் கோபி.

மாட்டிய கோபி
இந்த விஷயம் இரு தரப்பினரிடையேயும் தெரியாமல் பல தகிடு தத்தங்களை செய்து வந்த அவர் எப்போது மாட்டுவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காட்டினர். ஒரு கட்டத்தில் அவரது குட்டு காதலி ராதிகாவிடம் வெளிப்பட்டது. இதையடுத்து அவரை வெறுத்த ராதிகா, அவரை தனது வீட்டை விட்டு வெளியே போகும்படி கோபத்துடன் தெரிவித்தார்.

குடும்பத்தினரிடம் மாட்டிய கோபி
இதனால் மனம் குலைந்த நிலையில், தன்னுடைய குடும்பத்தினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கேஷுவலாக இருக்க கோபி முயற்சித்தார். ஆனால் ராதிகாவின் கணவன் ராஜேஷ், பாக்கியலட்சுமி குடும்பத்தினரிடம் கோபியின் இந்த காதல் விவகாரத்தை வீடியோ ஆதாரம் மூலம் வெளிப்படுத்தினார்.

கோபிக்கு விபத்து
இதையடுத்து கோபியின் விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவருகிறது. இதுகுறித்து தெரிந்துக் கொண்ட கோபி, மனக்குழப்பத்துடன் காரை ஓட்டி சென்று மரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்துகிறார். தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுகிறார். விஷயம் கேள்விப்பட்டு ராதிகா, பாக்கியா இருவரும் அங்கு வருகின்றனர்.

மனைவியாக பணம் கட்டிய ராதிகா
மனைவி என்ற ஸ்தானத்தில் ராதிகா, பணம் கட்டுகிறார். ஆனால் பாக்கியா தான் பணம் கட்டியதாக அவரது குடும்பத்தினர் நினைக்கின்றனர். முன்னதாக மருத்துவமனைக்கு வரும் பாக்கியா, ராதிகா -கோபியின் உறவை அறிந்துக் கொள்கிறார். அதனால் நிலைகுலைந்து போகும் அவர் மழையை கூட பொருட்படுத்தாமல் நனைந்தபடி தன்நிலை மறந்து வீட்டிற்கு வருகிறார். ஒருநாள் முழுவதும் தனது வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சமடைகிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியுடனேயே அவரது வீட்டினர் தேடி வருகின்றனர்.

பொங்கியெழுந்த பாக்கியா
இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அவரை பார்த்து மொட்டை மாடியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் கோபியும் வீட்டிற்கு வர, அவரைப்பார்த்து பொங்கியெழும் பாக்கியா, பல கேள்விகளை கேட்கிறார். கணவன் என்பதற்காக கோபி செய்த அனைத்து விஷயங்களையும் பொறுத்துப் போன அவர், தற்போது பொங்கியெழுந்ததை பார்க்க முடிந்தது.

கோபியிடம் பாக்கியா கோபம்
கோபியின் மருத்துவ செலவுகளை கட்டியது யார் என பாக்கியா அவரை பார்த்து கேட்கிறார். உடனே அவரது மகன் செழியன், நீ தானேம்மா கட்டினாய், கோபியின் மனைவி தான் கட்டினதாக மருத்துவமனையில் கூறினார்கள் என்று கூறுகிறார். உடனே பாக்கியா, கோபியின் மனைவிதான் பணத்தை கட்டியதாக கூறினார்களே தவிர பாக்கியலட்சுமி கட்டியதாக கூறினார்களா என்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

பதறும் கோபி
இதையடுத்து பாக்கியலட்சுமிக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று கோபி பதறுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் அவருக்கு முழி பிதுங்குகிறது. இவ்வளவு நாட்களாக கோபி மாட்டுவாரா என்ற கேள்வியுடன் இருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்த இந்த எபிசோட்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











