சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் பாக்கியலட்சுமி.. சமையல் போட்டியில் வெல்வாரா?
சென்னை : விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர், தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை தினந்தோறும் சந்தித்து வருகிறது.
இந்தத் தொடரில் வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ராதிகாவின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறார் பாக்கியலட்சுமி.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. தன்னுடைய கணவன் தனக்கு தெரியாமல் தன்னிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியதுகூட தெரியாத அளவில் வெள்ளந்தியாக இருந்தார் பாக்கியலட்சுமி. அவரது உழைப்பை மற்றும் தியாகத்தை அந்தக் குடும்பத்திற்காக செலவிட்டார்.

விவாகரத்து கொடுத்த பாக்கியா
இந்நிலையில் தன்னுடைய கணவன் தனக்கு செய்த துரோக்கத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து பொங்கி எழுந்த பாக்கியலட்சுமி, முதலில் கோபிக்கு விவாகரத்து கொடுத்தார். தன்னுடைய கணவன் தன்னிடம் கேட்டதைத்தான் தான் கொடுத்ததாக குடும்பத்தினரிடையே அவர் விளக்கம் கொடுத்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய கோபி
ஆனால் இதை ஒட்டுமொத்த குடும்பமும் ஏற்கவில்லை. அவரது மாமனார் மற்றும் மகன் எழில் இருவர் மட்டுமே பாக்கியலட்சுமிக்கு தோள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய மகனின் இந்த செய்கையால் ஆத்திரமடைந்த கோபியின் அப்பா, கோபியை வீட்டை விட்டு துரத்துகிறார்.

அம்மாவை திட்டும் செழியன்
இதனால் குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரமும் தற்போது பாக்கியா தலையில் விழுகிறது. அவருடைய மகன் செழியனும், தன்னுடைய அப்பா இருந்தால் அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொண்டிருப்பார். தன்னுடைய அம்மாமீது தான் தவறு என்று கூறிவருவதுடன், தான் அந்த வீட்டின் செலவுகளை ஏற்கமாட்டேன் என்றும் கூறுகிறார்.

அடுத்தடுத்த பெரிய செலவுகள்
இந்நிலையில் இனியாவின் படிப்பு செலவு, வீட்டின் கரண்ட் பில் என ஒவ்வொன்றாக பாக்கியாவிற்கு மலைப்பை ஏற்படுத்துகின்றன. இதனிடையே வீட்டின் தேவைகளை சமாளிப்பதற்காக தான் எதையாவது செய்ய வேண்டும் என்று அவர் பரிதவிக்கிறார். இதனிடையே பெரிய சமையல் ஆர்டரை பிடிப்பதற்காக செயலில் அவர் ஈடுபடுகிறார்.

சமையல் போட்டி
அந்தப் போட்டியில் பலர் இருக்க, போட்டியாளர்களுக்கு 15 நிமிடங்களுக்கான டாஸ்க்குடன் சமையல் போட்டி வைக்கப்படுகிறது. இதில் பாக்கியா ஜெயிப்பாரா, தன்னுடைய வீட்டின் செலவுகளை சமாளிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இதற்கான ப்ரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாக்கியா
தன்னுடைய கணவனின் உதவியில்லாமல் சுய மரியாதையுடன் வாழ நினைக்கிறாள் பாக்கியா. அதற்கு அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பே அவருக்கு இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தனக்கு தெரிந்த சமையலை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் அவரது கனவு பலிக்குமா என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications











