புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்.. பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் சொல்லமறந்த கதை!

சென்னை : பாக்கியலட்சுமி சீரியல் நாயகன் கோபி, பாக்கியா மட்டும் சந்தோஷமா இருந்தா போதுமா,கோபிக்குனு மனசு இல்லையா என சீரியல் குறித்து வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார்.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலில் வரும் கோபி தான் இந்த சீரியலின் அத்தனை பரபரப்புக்கு காரணமாக உள்ளார். நெகடிவ் ரோலால் சீரியலின் டி.ஆர்.பியை எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் கோபி. பெயர் தான் பாக்கியலட்சுமி சீரியல் ஆனால் மொத்த கதையின் தூணாக கோபி இருக்கிறார்.

சுவாரசிய திருப்பங்கள்

சுவாரசிய திருப்பங்கள்

இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் கோபியை திட்டி தீர்க்கின்றனர். ஆனாலும் தான் ஏற்று நடிக்கும் ரோலில் சிறப்பாக நடித்து வருகிறார் சதீஷ் குமார். முதல் மனைவி பாக்கியாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். வீட்டில் உள்ள அனைவருக்கும் கோபியின் போலிமுகம் தெரிந்துவிட மிகுந்த பதற்றத்தில் இருக்கும் கோபி விபத்தில் சிக்கி விடுகிறார். அடுத்து என்ன... அடுத்து என்ன என மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

கோபிக்கு மனசு இல்லையா

கோபிக்கு மனசு இல்லையா

இந்நிலையில், நடிகர் சதீஷ்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் கதாபாத்திரம் குறித்து பேசி உள்ளார். அதில், இந்த சீரியலில் கோபியின் கதாபாத்திரம் குறித்து அனைவரும் கடுமையாக திட்டுகிறார்கள். ஆனால், அதைப்பற்றி நான் இனி பேச மாட்டேன். பாக்கிய சந்தோஷமா இருந்தா மட்டும் போதுமா, கோபி சந்தோஷமா இருக்க வேண்டாமா, அவருக்கும் மனசு, ஆசை எல்லாம் இருக்கும்தானே.

புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்

புடிக்காம 3 குழந்தை பெத்துக்கிட்டேன்

கோபிக்கு 23 வயசுல கல்யாணம் ஆச்சு, அந்த வயசுல உடல் தேவை நிச்சயம் இருக்கும் அப்படித்தான் கோபி 3 குழந்தைகளை பெற்று இருக்கிறார். ஆனால், மனசுக்குள் ராதிகா மீதான காதல், 25 வருஷம் தூங்கிட்டு இருந்துச்சு. மறுபடியும் எதார்த்தமா அவளை சந்தித்த போது என்ன ஆகும்னு நினைசீங்களா சும்மா பத்திக்கிட்டு எரியும் என்று மிகவும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார் நடிகர் சதீஷ்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X