அரசியலுக்கு வர என்ன தகுதி வேணும்? சாராயம் காச்சியிருக்கணுமா? விஜயை ஏன் பாடாப்படுத்துறீங்க.. நடிகர்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை பலரும் வன்மையாக கண்டித்து வரும் நிலையில், பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதானா தகுதியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Vijay TVK leader serial actor
Photo Credit:

நடிகர் சதீஷ் குமார்: அந்த வீடியோவில், வாழ்க்கையிலும் அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்ய முதலில் நல்ல மனசு வேண்டும். ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே அது மிகப்பெரிய தகுதி தான். இது அரசியலுக்கு மட்டும் இல்லை, வாழ்க்கையில் நல்ல அப்பாவாக, நல்ல அம்மாவாக, நல்ல நண்பனாக இருக்க கூட நல்ல மனசு தேவை. மனசு சுத்தமாக இருந்தால் போதும். நான் இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களித்து வந்தேன். அது கட்சிக்காக மட்டும் இல்லை, புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக, அவர் மீது இருக்கும் மரியாதைக்காக.

ஐ லவ் யூ விஜய்: ஆனால், இனிமேல் அதே நிலை தொடருமா என்றால் சந்தேக தான். ஒரு சின்ன பையன் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனித்து நின்று புரட்சி செய்து ஜெயித்து இருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள், அவர் நல்ல ஆட்சி செய்யவில்லை என்றால் அதன் பிறகு மக்கள் என்ன செய்ய வேண்டும் என முடிவு எடுப்பார்கள். ஆனால், இரண்டு பெரிய கட்சிகளும் சேர்த்து பேச்சுவார்த்தை நடத்துவதை பார்க்கும் போது வேதனையாக இருக்கு. இவர்கள் கொஞ்சம் ஒதுங்கி நின்று மக்களின் முடிவை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய சதீஷ், தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய், ஐ லவ் யூ... நீங்கள் நல்லா வருவீங்க... ஆல் தி பெஸ்ட் என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X