பாக்கியலட்சுமி சீரியலில் அடக்கமாக இருக்கும் அக்ஷிதா.. ஜோடி ஆர் யூ ரெடி 2 ஷோவில் போட்ட ஆட்டம் இருக்கே!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டாட செய்து வருபவர் நடிகை அக்ஷிதா அசோக். முன்னதாக இந்த கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரித்திகா விலகிய நிலையில் அக்ஷிதா அசோக், தற்போது அமிர்தாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் அவர் தற்போது விஜய் டிவியில் தொடங்கி உள்ள ஜோடி ஆர் யூ ரெடி ஷோவின் இரண்டாவது சீசனில் சிறப்பான ஆட்டம் போட்டுள்ளார்.
மய்யா மய்யா என்ற பாடலுக்கு அக்ஷிதா போட்டுள்ள இந்த ஆட்டம் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அவரது காஸ்ட்யூமும் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. ரசிகர்களுடன் இணைந்து நடுவர்களும் அவரது இந்த ஆட்டத்தை பார்த்து மலைக்கும் அளவிற்கு அக்ஷிதாவின் ஆட்டம் காணப்பட்டது.

ஜோடி ஆர் யூ ரெடி 2 ஷோ: விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி ஷோ தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கியுள்ளது/ கடந்த சீசனில் இந்த ஷோ ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசன் துவங்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் மீனா, ஸ்ரீதேவி மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடுவர்களாக இருந்த நிலையில் தற்போது மீனாவிற்கு பதிலாக நடிகை ரம்பா இந்த சீசனின் நடுவராக இணைந்துள்ளார். 90களில் மற்றும் 2000ன் கனவு கன்னியாக பல படங்களில் தென்னிந்திய அளவில் நடித்துள்ள நடிகை ரம்பா இடையில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ரீ என்ட்ரி கொடுத்த ரம்பா: இந்நிலையில் மீண்டும் ரம்பாவின் ரீ என்ட்ரி ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சிமூலம் அமைந்துள்ளது. ரம்பா என்றாலே நடனத்திற்கும் கவர்ச்சிக்கும் அடையாளமாக பார்க்கப்பட்ட நிலையில் இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் அவரது பங்களிப்பு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜோடி ஆர் யூ ரெடி 2 நிகழ்ச்சியில் அவரது என்ட்ரி மிகவும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளது. அழகிய லைலா என்ற அவருக்கு மிகப் பெரிய மாஸை கொடுத்த பாடலுடன் அவர் இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மலைக்க வைத்த அக்ஷிதா நடனம்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை அக்ஷிதா அசோக் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மய்யா மய்யா பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் நடுவர்களை மலைக்க வைத்தது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது மருமகளாக அமிர்தா என்ற கேரக்டரில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் அக்ஷிதா அசோக். மிகவும் அடக்க ஒடுக்கமான அவரது இந்த கேரக்டர், தன்னுடைய கணவனின் வெற்றியில் பங்களிக்கும் விதமான அமைந்து வருகிறது. மிகவும் அமைதியான அமிர்தா கேரக்டர் பாக்கியலட்சுமி சீரியலின் சென்டர் ஆஃப் அட்ரக்ஷனாக உள்ளது.

ரசிகர்கள் வியப்பு: இந்நிலையில் அக்ஷிதா அசோக் இந்த அளவிற்கு ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் டான்ஸ் போட்டது ஏராளமான ரசிகர்களை அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாகியுள்ளது. இந்த பாடலில் அவரது உடையும் மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. சீரியல்களில் நடித்துவரும் அக்ஷிதா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுபவர்.



Click it and Unblock the Notifications











