இன்ஸ்டா வீடியோவில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..ஏன் என்ன ஆச்சு பதறிய ரசிகர்கள் !

சென்னை : சீரியல் நடிகை ஜெனிபர் இன்ஸ்டாகிராமில் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரின் நாயகன் கோபி மனைவியை பிடிக்காமல் குடும்பத்திற்காக சகித்து கொண்டு வாழ்த்து கொண்டிருக்கிறான்.

அந்த சமயத்தில் முன்னாள் காதலி மீது மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் தில்லுமுல்லு வேலை பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்து கொண்டு வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஆரம்பத்தில் ராதிகா கதாத்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர். அந்த தொடர் மூலமாக அவருக்கு அதிகம் ரசிகர்கள் கிடைத்தார்கள். ஆனால் கடந்த ஜூலை மாதம் அவர் பாக்யலட்சுமியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ஜெனிபர கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலிலிருந்து வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, வேறு எந்த புது தொடர்களிலும் நடிக்காமல் குழந்தையை கவனித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜெனிபர்,கணவரும் ஆட்டம் போடும் வீடியோ,குழந்தையின் புகைப்படம் , போட்டோஷூட் என இணையத்தில் படு பிஸியாக இருக்கிறார்.

கதறி அழுத படி

இந்நிலையில், நடிகை ஜெனிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுத படி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் , ப்ரோமோஷன் பண்ற வீடியோனு தயவு செய்து நினைக்காதீங்க என் அப்பா டான்ஸ் மாஸ்டர் சின்னா, நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை வயசாகி விட்டதால் மரணமடைந்துள்ளார்.

டான்ஸ் மாஸ்டர் சின்னா

டான்ஸ் மாஸ்டர் சின்னா

அப்பாவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் தொலைபேசி மற்றும் மெசேஜ் மூலம் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் யாருக்கும் என்னால் பதில் கூற முடியவில்லை என்பதால் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். தயவு செய்து அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார். டான்ஸ் மாஸ்டர் சின்னா. கமல், ரஜினி என மெகா ஸ்டார்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X