Reshma pasupuleti: என்னால அமைதியா இருக்கவே முடியாது.. பாக்கியலட்சுமி ராதிகா க்யூட் பேச்சு!
சென்னை: ரேஷ்மா பசுபுலேட்டி சினிமா, வெப் தொடர்கள் மற்றும் சீரியல்களில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் என இரு வேறு தொடர்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் உள்ளீட்டவற்றை மேற்கொண்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் இவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து வீடியோக்கள், புகைப்படங்கள் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் கலர்ஃபுல்லாக காணப்படுகிறது.
தமிழில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ரேஷ்மா. இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து இவர் காமெடி கலாட்டா செய்திருந்தது ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த ரேஷ்மா, விலங்கு வெப் தொடரில் விமலுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமா வெப் தொடர்கள் மற்றும் டிவி சீரியல்கள், ஷோக்கள் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்து இருந்தாலும் இவரது கேரக்டர்கள் கவனத்தைப் பெற்றுள்ளன. அந்த வகையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்தார் ரேஷ்மா. இந்தப் படத்தில் புஷ்பா என்ற இவரது கேரக்டர் மிகுந்த கவனத்தை பெற்றது. இதே போல விலங்கு என்ற வெப் தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில் நடிகர் விமலுடன் இணைந்து நடித்திருந்தார்.
சீரியல்களில் பிசி: சீரியல்களில் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் என இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறார். இதில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவாக நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார். சில சமயங்களில் வில்லத்தனம் காட்டும் இந்த கேரக்டர் சமயத்தில் பாக்கியலட்சுமிக்கு ஆதரவாக செயல்படுவதை இந்த சீரியலில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இவரது கேரக்டர் மிகுந்த கவனத்தைப் பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி,
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராமில் இவரது அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நரேஷுடன் இணைந்து திருமண போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திருந்தார். டான்ஸ் வீடியோக்களையும் இவர் பதிவிட்டு வருகிறார். பாக்கியலட்சுமி தொடரில் இவரது கேரக்டர் ராதிகா அதிகமான ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில், பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் அனுபவம் குறித்து தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்: அதன்படி இந்த சீரியலில் தனக்கு மற்ற நடிகர்களுடன் காம்பினேஷன் காட்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் ஆனாலும் இந்த யூனிட் மிகவும் மகிழ்ச்சியானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி உள்ளிட்டவர்கள் குறிப்பாக சீரியலின் ஒளிப்பதிவாளர் முத்து மிகவும் கலகலப்பாக அந்த சூழலையை சிறப்பாக மாற்றி வருவதாகவும் ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்துள்ளார். மேலும் தான் எப்போதுமே அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவள் இல்லை என்று தெரிவித்துள்ள ரேஷ்மா தான் இருக்கும் இடத்தை தொடர்ந்து கலகலப்பாக வைத்துக் கொள்ள தானும் ஒரு காரணமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











