தனியா உன்னால வாழ்ந்திட முடியுமா? சவால் விட்ட கோபி..பாக்யா எங்கே போவார்.. இனி அடுத்து என்னாகும்!

சென்னை : பாக்யலட்சுமி சீரியல் பலவிதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இத்தனை நாளாக கோபி என்ன சொன்னாலும் தலையாட்டிருந்த பாக்யா நேற்றைய எபிசோடில் நீதிமன்றத்தில் வைத்லே லேஃப்ட் அண்ட் ரைட்வாங்கி விட்டார்.

இனி பாக்யா என்ன செய்ய போகிறார்? எங்கு போகபோகிறார் என்பதை காண ரசிகர்கள ஆர்வமாக உள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில், பாக்யாவும், எழிலும் கோர்ட்டுக்கு வந்து காத்து கொண்டிருக்கின்றனர். அப்பா வருவாருன்னு இன்னும் நம்புறியாம்மா. அவர் வராம போயிட்டா என்ன பண்றது என எழில் கேட்க, அவருதான விவாகரத்து கேட்டாரு. இப்போ நானே கொடுக்கும் போது அவருக்கு என்ன கசக்குதா கண்டிப்பா வருவாருடா என்ற பேசிக்கொண்டு இருக்கும் போதே கோபி கோட்டுக்கு வருகிறார்.

விவாகரத்துக்கு நான் தயாரா

விவாகரத்துக்கு நான் தயாரா

நீதிபதி இருவரிடமும் விவாகரத்துக்கு முழு சம்மதமா? இல்லை மறுபடியும் கவுன்சிலிங் போறீங்களா என கேட்கிறார். உடனே பாக்யா அதெல்லாம் வேண்டாம். விவாகரத்துக்கு நான் தயாரா இருக்கிறேன் யோசித்து சொல்லுங்க என நீதிபதி சொல்ல. நல்லா யோசித்துவிட்டேன் மேடம், வாழ்க்கையில் தன்னம்பிக்கையின் சுயமரியாதையும் முக்கியம் இங்க யாரையும் யாரும் அண்டி பொழைக்க தேவையில்லை. யாரிடமும் யாரும் அடிமையாக இருக்க தேவையில்லை அவர் அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனைவருக்கும் உரிமை இருக்கு அதுபோல உனக்கும் உரிமை இருக்கு என பேசினார்.

விவாகரத்து

விவாகரத்து

இதை அனைத்தையும் கேட்ட நீதிபதி இரண்டு பேரும் இன்றிலிருந்து கணவன் மனைவி கிடையாது. இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிடுகிறார். இதையடுத்து, வெளியே வந்த பாக்யாவிடம் எழில் அம்மா, ஒவ்வொருத்தம் பல வருஷமா டைவஸ் கேட்டு அலைறாங்க ஆனால், உனக்கு இவ்வளவு சீக்கிரம் டைவஸ் கிடைச்சிடுச்சி என்று பேசிக்கொண்டு இருக்க அங்கு கோபத்தோடு வந்த கோபி.

தனியா உன்னால வாழ்ந்திட முடியுமா?

தனியா உன்னால வாழ்ந்திட முடியுமா?

என்ன பாக்யா நீதிபதி முன்னாடி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசின. தனியா உன்னால வாழ்ந்திட முடியுமா? இப்ப எழில் பக்கத்துல இருக்க தைரியத்துல இப்படி பேசுற இவன் எத்தனை நாளைக்கு உன்கூட இருப்பான். போக போக தான் நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்கு புரியும். என்ன பழி வாங்குறதா நெனச்சு உன்னை நீயே பழி வாங்கிக்கறி. என்னமோ உன்ன தியாகினு என் குடும்பம் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. அப்படி அனைவரையும் நம்பவெச்சி இருக்க

இனி பாக்யா எங்கே போவார்

இனி பாக்யா எங்கே போவார்

இந்த குடும்பத்துக்காக ரத்தம் சிந்தி உழைத்திருக்கேன். இந்த குடும்பத்துக்காக எல்லா சந்தோஷத்தையும் தியாகம் செய்து வீடு,காரு, ஏசினு உங்களை சொகுசா வாழவெச்சது இந்த கோபி உச்சகட்ட கோபத்தில் பேசுகிறான் கோபி இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இனி பாக்யா எங்கே போக போகிறார்...என்ன செய்வார்.. என்ன முடிவு எடுக்கபோகிறார் என்பது தெரியவில்லை. பாக்யா செல்வி வீட்டுக்கு சென்று அங்கிருந்து மீண்டும் தனது சமையல் வேலையை தொடங்கி கோபியே வியந்து பார்க்கும் பெண்ணாக வரப்போகிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X