ஆவேசம்.. கண்ணீர்.. கேள்விகள்.. பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என்ன நடக்கும்.. ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி.

இந்தத் தொடரில் கோபியின் காதலி மற்றும் மனைவி இருவருக்கும் கோபியின் காதல் லீலைகள் குறித்து தெரிந்து விட்டது.

இதையடுத்து தொடரில் ரசிகர்கள் எதிர்பார்த்த பரபரப்பான கட்டம் தற்போது அரங்கேறி வருகிறது.

விஜய் டிவி

விஜய் டிவி

விஜய் டிவி எப்போதுமே நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் கொடுத்து வருகிறது. இந்த சேனலில் அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கையும் அதிகரித்து வருகின்றன. அதில் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

இந்தத் தொடரில் கோபி கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு பக்கம் மனைவி மற்றொரு பக்கம் காதலி என இருவரையும் தன்னுடைய சுயநலத்திற்காக ஏமாற்றிவந்த கோபி கேரக்டர் எப்போது இரு தரப்பிலும் மாட்டுவார் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

வெளிப்பட்ட உண்மை

வெளிப்பட்ட உண்மை

தொடர்ந்து அவர்களது பொறுமையை சோதித்த இயக்குநர், ஒரு கட்டத்தில் அவரே பொறுமையை இழந்திருப்பார் போல. அதனால் முதலில் கோபியின் தகிடுதத்தங்களை அவரது காதலிக்கு தெரிய வைத்தார். தொடர்ந்து கோபிக்கு ஏற்பட்ட விபத்தின்மூலம் ராதிகாவுடனான அவரது காதலை தற்போது அவரது மனைவி பாக்கியாவிற்கும் தெரியவைத்துள்ளார்.

பரபரப்பான கட்டத்தில் தொடர்

பரபரப்பான கட்டத்தில் தொடர்

இதனால் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோபியின் காதல் குறித்து அறிந்துக் கொண்ட பாக்கியா, மருத்துவமனையில் இருந்து பரிதவிப்புடன், தன்னை மறந்த நிலையில், நடுரோட்டில் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்தார். பார்ப்பவர்களை நிலைக்குலைய செய்தது அவரது இந்த செயல்.

கேள்வி கேட்ட பாக்கியா

கேள்வி கேட்ட பாக்கியா

இதையடுத்து வீட்டிற்கு வந்த கோபியை அவர் நிற்க வைத்து கேள்விகளை கேட்டார். இதில் தன்னை தன்னுடைய கணவன் இத்தனை வருடங்களாக ஏமாற்றியுள்ளாரே என்ற ஆதங்கம் வெளிப்படுகிறது. தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த கோபியை நிற்கவைத்து பாக்கியா கேள்விகளை அடுக்குகிறார்.

தன்னைப்பார்த்து பரிதாபப்பட்ட விதி

தன்னைப்பார்த்து பரிதாபப்பட்ட விதி

தொடர்ந்து வீட்டிற்கு கூட வரமுடியாமல் கோபி, வேலை செய்ததாக தான் பரிதாபப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாயே என்று அந்த நேரத்தில் விதி தன்னைப் பார்த்து பரிதாபப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார். அவரின் இந்த கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல் அவருக்கு என்ன பதிலை கூற முடியும் என்று தெரியாமல் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருக்கிறார் கோபி.

பாக்கியா என்ன முடிவெடுப்பார்?

பாக்கியா என்ன முடிவெடுப்பார்?

திருமணமான ஒரு மகன், திருமணத்திற்கு காத்திருக்கும் மற்றொரு மகன், வளர்ந்த மகள் என்று மூன்று பேரை வைத்துக் கொண்டு, தன்னுடைய கணவனின் இந்த துரோகத்திற்கு பாக்கியா எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை தெரிந்துக் கொள்ள தற்போது தொடரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X