Baakiyalakshmi serial: நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா.. பாக்கியாவிடம் உறுதியாக பேசிய ராதிகா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோட்களை சிறப்பாக கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் தற்போது பாக்கியா -பழனிச்சாமி நட்பை கொச்சைப்படுத்தி கோபி பேசியதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாக்கியா இன்னொரு கல்யாணம் செய்துக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்று ராதிகா அட்வைஸ் கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்தத் தொடரில் கோபியை விவாகரத்து செய்த பாக்கியா அவரது பெற்றோர் மற்றும் தன்னுடைய மகன்களையும் சேர்த்து கவனித்து வருகிறார். அடுத்தடுத்த பிசினஸ்களில் தன்னை முன்னேற்றும் வழிகளை நோக்கி அவர் செல்கிறார். ஆனால் அவரது முன்னேற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாத கோபி தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவுடன் இணைந்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
பாக்கியாவிடம் ஈஸ்வரி ஆத்திரம்: அவர்களை சமாளித்து தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கை மற்றும் பிசினசில் கவனம் செலுத்துகிறார் பாக்கியா. இருந்த போதிலும் தன்னுடைய மாமியாரையும் சமாளிக்க வேண்டி வருகிறது. கோபியின் பேச்சை கேட்டுக் கொண்டு தொடர்ந்து பாக்கியாவிடம் தன்னுடைய கோபத்தை காட்டுகிறார் ஈஸ்வரி. இந்நிலையில் உடல்நிலை சரியில்லை என்று கூறி கோபியை மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கே அழைத்து வருகிறார் ஈஸ்வரி. அவரை தொடர்ந்து ராதிகாவும் அங்கே வர, குழப்பம் மேலும் அதிகரிக்கிறது.
பழனிச்சாமி -பாக்கியா உறவை கொச்சைப்படுத்தும் கோபி: பழனிச்சாமியும் பாக்கியாவும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேசிக் கொண்டிருக்க, அங்கே வரும் கோபி அவர்கள் இருவரையும் கொச்சைப் படுத்தி பேசுகிறார். இருவரும் யாரும் இல்லாத நேரத்தில் லூட்டி அடிப்பதாக குற்றம் சாட்டுகிறார். வெளியில் சென்றிருந்த தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்தவுடன் இந்த பிரச்சினையை அவரிடம் சொல்லி பூதாகாரமாக்குகிறார். இதை கேட்கும் எழில் மற்றும் செழியன் இருவரும் பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக இருக்கின்றனர்.
மறுமணம் குறித்து பாக்கியாவிடம் பேசும் ராதிகா: இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாக்கியாவிற்கு சப்போர்ட் செய்யும் ராதிகா, அவர் இன்னொரு திருமணம் குறித்து யோசிக்க அறிவுறுத்துகிறார். பிள்ளைகள் அவரவர் பாதைகளில் சென்றுவிட்டால் பாக்கியா தனியாளாக ஆகிவிடுவார் என்றும் அவர் மறுமணம் செய்துக் கொண்டால் அதை கேள்விக் கேட்க கோபிக்குக்கூட உரிமையில்லை என்றும் ராதிகா கூறுகிறார். இதையடுத்து பேசும் பாக்கியா, செல்வி மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை ராதிகாவிற்கு புரியவைக்கிறார்.
பிள்ளைகளால் மட்டுமே சந்தோஷம்: தான் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பாடு, சினிமா என்று காலத்தை கழித்திருப்பேன் என்று செல்வி கூறுகிறார். தொடர்ந்து இரண்டாவது திருமணத்தால் ராதிகா மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ராதிகா திணறுகிறார். பிள்ளைகளால் மட்டுமே திருமணத்தால் சந்தோஷம் கிடைப்பதாகவும் செல்வியிடம் பாக்கியா கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











