Baakiyalakshmi: வராம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.. பாக்கியாவிடம் வருத்தப்படும் பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

பழனிச்சாமி மற்றும் பாக்கியா உறவை கொச்சைப்படுத்தி கோபி பேசிய நிலையில், பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார் பாக்கியா.

Baakiyalakshmi Serial Promo Dec 2nd 2023, Episode: Baakiya Apologies to Palanisamy For Gopi

மற்றவர்களுக்காக அவரது நட்பை தான் இழக்க தயாராக இல்லை என்பதையும் அவருக்கு விளக்கமாக கூறுகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகளுடன் காணப்படுகிறது. இந்த சீரியல் தற்போது சேனலின் மூன்றாவது இடத்தில் காணப்படுகிறது. மீண்டும் ரசிகர்களை கவர்ந்து முதலிடத்திற்கு முன்னேறும் எதிர்பார்ப்பில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பழனிச்சாமியுடனான நட்பை தன்னுடைய முன்னாள் கணவர் கோபி இழிவுப்படுத்தி பேசிய நிலையில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார் பாக்கியா.

மன்னிப்பு கேட்கும் பாக்கியா: இதையடுத்து பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட் பிரச்சினைக்கு சமாதானம் கூறவே தான் பாக்கியா வீட்டிற்கு வந்ததாகவும் ஆனால் தான் அப்படி வராமல் இருந்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது என்றும் பழனிச்சாமி தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார். இனிமேல் பாக்கியாவுடனான நட்பை குறைத்துக் கொண்டு சந்திப்பதையும் குறைத்துக் கொள்ள தான் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். இதனால் பாக்கியா மகுந்த வேதனை அடைகிறார்.

பாக்கியா திட்டவட்டம்: பழனிச்சாமி போன்றவர்களின் நட்பால்தான் வீட்டில் முடங்கியிருந்த தான் தைரியமாக வெளியில் பல வேலைகளை செய்து வருவதாகவும் மற்றவர்களுக்காக தங்களுடைய நட்பை எந்த நேரத்திலும் நிறுத்திக் கொள்ள முடியாது என்றும் பாக்கியா கூறுகிறார். மேலும் நட்பை குறைத்துக் கொள்வது போன்ற முடிவை அவர் எந்த காலத்திலும் எடுக்கக்கூடாது என்றும் பாக்கியா திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் பழனிச்சாமி சமாதானம் அடைகிறார்.


புலம்பலில் கோபி: இதனிடையே தன்னுடைய நண்பர் செந்திலை சந்திக்கும் கோபி புலம்பித் தீர்க்கிறார். பாக்கியாவிற்கு வீட்டில் உள்ளவர்கள் சப்போர்ட் செய்வதுடன் இல்லாமல் ராதிகாவும் சப்போர்ட் செய்வதாகவும் அவர்கள் இருவரும் நட்பை புதுப்பித்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்று புலம்புகிறார். தன்னுடைய அம்மாவும் இந்த விஷயத்தில் தன்னை எச்சரிக்கை செய்ததாகவும் அவர் கூறுகிறார். அவருக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று தெரியாமல் செந்தில் முழிக்கிறார். ஆனாலும் அவர் கொடுத்த கடனை திருப்பி கேட்கவும் அவர் தவறவில்லை. ஆனால் அவரிடமிருந்து எஸ்கேப் ஆகிறார் கோபி.

அச்சுறுத்தும் கணேஷ்: இதனிடையே பாக்கியாவை கணேஷ் வழிமறிக்கிறார். அவர் கொடுத்த கெடுவில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கிறார். 12 நாட்களுக்குள் அமிர்தா விவகாரத்தில் பாக்கியா எதையும் செய்யவில்லை என்றால், தன்னால் முடிந்ததை தான் பார்த்துக் கொள்வேன் என்றும் எச்சரிக்கிறார். ஏற்கனவே செழியன் விவகாரத்தில் கோபித்துக் கொண்டு ஜெனி வீட்டை விட்டு சென்ற நிலையில், அடுத்ததா எழில் விவகாரத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடக்குமா?: இதனிடையே மழையால் தள்ளி வைக்கப்பட்ட பொருட்காட்சி தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து அதற்கான அலுவலகத்திற்கு சென்று பாக்கியா விசாரிக்க முயல்கிறார். அவரைப் போலவே பொருட்காட்சியில் ஸ்டால் அமைக்க டென்டர் எடுத்தவர்களும் அங்கு வந்து விசாரிக்க, அதற்கான அதிகாரி மறுநாள் பொருட்காட்சி நடக்குமா என்று தெரிவிக்கப்படும் என்று கூறுவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. இதனால் பாக்கியா மற்றும் செல்வி இருவரும் பரிதவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X