Baakiyalakshmi Serial Promo: பொருட்காட்சி கான்டிராக்டிற்கு தயாராகும் பாக்கியா.. அட என்ன இப்படி ஆகிப் போச்சு!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறது.

இந்த சீரியலில் தன்னுடைய மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் செய்வது அறியாது தவித்து வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial todays episode makes fans more impressive

பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் போன்றவை கைநழுவிப் போன நிலையில் தற்போது கவர்ன்மெண்ட் பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்டை அவர் எடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர், அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே கேரக்டர்களாக வைத்து அவர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்களை அழகாக கொடுத்து வருகிறார் இயக்குநர். ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சி அமைப்புகள் இந்தத் தொடரில் காணப்படுகிறது.

விமர்சனங்களை பெறும் பாக்கியா கேரக்டர்: தன்னுடைய கணவன் தன்னை விவாகரத்து செய்த போதிலும் அவரது பெற்றோரையும் தன்னுடைய சொந்தமாக நினைத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் பாக்கியா. மேலும் தன்னுடைய மகன்கள், மருமகள்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறை பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. ஆனாலும் பாக்கியாவின் கேரக்டர் ஒரு சில நேரங்களில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ரசிகர்கள் கேள்வி: தன்னுடைய மாமியார் ஈஸ்வரியின் அடுத்தடுத்த தாக்குதல்களை சமாளித்து அவர்களை ஏன் தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து காணப்படுகிறது. ஆனாலும் சொந்த மகளாக பாவிக்கும் மாமனாரின் அரவணைப்பு இந்தக் கேள்வியை மறக்கடித்து விடுகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துள்ள போதிலும் அவரது வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கோபி செய்யும் செயல்கள், அதை மீறி பாக்கியா உயரும்போது அவர் மூக்குடை படுவது என அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யத்தை கொடுத்து வருகின்றன.

பாக்கியாவின் உறுதி: தற்போது கேன்டீன் கான்டிராக்ட், மசாலா பிசினஸ் என அனைத்தையும் இழந்து குடும்பத்தை நடத்தவே கஷ்டப்படுகிறார் பாக்கியா. ஆனாலும் தன்னுடைய மகன்கள், மாமனார் என யாரிடமும் கையேந்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். பழனிச்சாமி பணம் கொடுக்க முன்வந்தாலும் அதையும் மறுக்கிறார். இந்நிலையில் கவர்மெண்ட் பொருட்காட்சி கான்டிராக்டை தற்போது அவர் பெற்றுள்ளார். அதற்கான வேலைகளையும் அவர் துவங்கியுள்ளதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பொருட்காட்சி கேன்டீன் கான்டிராக்ட்: பொருட்காட்சி துவங்கும் நாள் நெருங்கிய நிலையில் அதற்கான பொருட்களை அவர் அனுப்பி வைக்கிறார். அப்போது மழை பெய்கிறது. இதனால் கேன்டீன் எப்படி நடக்கும், பொருட்காட்சி நடக்குமா, நடந்தாலும் அதிகமான மக்கள் வருவார்களா என குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் பொருட்காட்சி சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் பாக்கியா. இந்த நேரத்தில் கைக்கொடுக்க வேண்டிய ஈஸ்வரி, பாக்கியாவை திட்டித் தீர்ப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X