Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வீடு இல்லாமல் ரோட்டில் அலையும் கோபி..அப்பாவியா அழுது புலம்பி நாடகம்..ஏமாறுவாரா ராதிகா?
சென்னை : பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராதிகா வீட்டுக்கு சென்று அழுது புலம்பி நாடகமாடுகிறார்.இன்றைய பாக்யலட்சுமி சீரியலில் என்ன நடக்கக்போகுதுனு பார்க்கலாமா?
கோபி வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தத்துடன் இருக்கிறார் பாக்யா அப்போது அங்கு வரும் செல்லி, அக்கா ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.
உங்கமேல எந்த தப்பும் இல்லை,இதை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நாள் புரிஞ்சிப்பாங்க, மனசை மட்டும் விட்டுடாம இருக்க எல்லாம் சீக்கிரமா சரி ஆய்டும் என்றார்.
கொடி பறக்க தட தடத்து களமிறங்கிய சோழன்: ரஹ்மான் இசையில் மிரட்டும் பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள்

கதறி அழுத பாக்யா
இதுவரை என்ன நடந்தாலும் அழாமல் கோபத்துடன் எதிர்கொண்ட பாக்யா நடந்தவற்றையெல்லாம் நினைத்து சமையலறையில் கதறி அழுகிறார். அவருக்கு செல்வி ஆறுதல் சொல்ல, இந்த குடும்பத்துக்குள்ள வந்த நாளில் இருந்து நான் என் கடமையை சரியாகத்தான் செய்திட்டு இருக்கேன் எல்லாரையும் நான் நல்லாதான் பாத்துக்கிறேன். அவரை எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு உனக்கே தெரியும்ல. நான் அவரை வீட்டை விட்டு போக சொல்லல. இனிமே எங்களுக்கு இடையில ஒன்னுமில்லை என கதறி அழுகிறாள்

நிம்மதியை கெடுத்துட்டா பாக்யா
இதற்கிடையில் மூர்த்தி ஈஸ்வரி நடந்த பிரச்சனையை பற்றி பேசுகின்றனர். இனி இந்த பிரச்சனையை எப்படி சரி பண்றதுனே தெரியல, கோபியும் பாக்யாவும் கொஞ்சம் கூட யாரை பத்தியும் யோசிக்காம இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாங்க என ஈஸ்வரி மூர்த்தியிடம் புலம்புகிறாள். கோபி செய்தது தப்புத்தான் அந்த தப்பை திருத்திக்க ஒரு வாய்ப்புக்கூட கொடுக்காம ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியை இந்த பாக்யா கெடுத்துட்டாளே என ஆதங்கப்படுகிறாள் ஈஸ்வரி.

கோவபட்ட மூர்த்தி
மூர்த்தி பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார். உடனே ஈஸ்வரி கோபி இப்ப வெளியே போயிட்டான். நேரா ராதிகா வீட்டுக்கு தானே போவான் என கூற, நான் அப்படி எல்லாம் போக விடமாட்டேன். நீ தேவை இல்லாம யோசிக்காத என மூர்த்தி சமாதானப்படுத்துகிறார். அதற்கு இந்த ஜென்மத்துல பாக்யாவும், கோபியும் தான் புருஷன் பொண்டாட்டி என கறாராக ஈஸ்வரி கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க
வீட்டைவிட்டு வெளியே போன கோபி, நேராக ராதிகா வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றவுடன் மயூவின் உடல் நலம் குறித்து கேட்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் கோபியிடம் வீட்டுக்கு சென்றீர்களா? என கேட்க, அந்த வீட்டில் இருக்கிற அனைவரும் பாக்யா பக்கம் இருக்காங்க, இத்தனை வருஷமா அந்த குடும்பத்திற்காக உழைத்த என்னை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிட்டாங்க என்கிறார்.

புலம்பிய கோபி
காலையில இருந்து எங்கே போறதுன்னு தெரியாம கார்ல தெருத்தெருவா சுத்திட்டு இருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமே இல்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை என கூறி அப்பாவித்தனமா முகத்தை வைத்துக்கொண்டு ராதிகாவை ஏற்றுக்கிறார். இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. இனி நாளை என்ன நடக்கும் என பார்க்கலாம்.