Don't Miss!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நீ இல்லனா செத்துடுவேன்..அழுது புலம்பிய கோபி...நொந்துபோன ராதிகா!
சென்னை : வீட்டை விட்டு வெளியே வந்த கோபி இதுதான், ராதிகாவிடம் சேருவதற்கு சரியான சந்தர்ப்பம் என, அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு உருகி உருகி பேசுகிறார்.
Recommended Video

என்னை எல்லாரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் துரத்திவிட்டார்கள்,எங்க போறதுனு தெரியாம ரோடு ரோடா சுத்திக்கிட்டு இருக்கேன். உன்மேல இருந்த காதலால்தான் நான் டைவர்ஸ் வாங்கினேன் எல்லாத்துக்கும் காரணம் நான் உன்மேலவச்ச அன்புதான்.
உன்னோட வாழணும்னு ஆசைப்பட்ட காரணத்துக்காக நடுத்தெருவுல நிற்கிறேன். நீயும் என்னை ஏத்துக்கலனா சாவுரதைத்தவிர வேறுவழியில்லை. அதனால நல்லா யோசிச்சி ஒரு முடிவு எடுத்து எனக்கு மெசெஜ் பண்ணு என சொல்லிவிட்டு கோபி அங்கிருந்து வெளியே வருகிறார்.
வீடு
இல்லாமல்
ரோட்டில்
அலையும்
கோபி..அப்பாவியா
அழுது
புலம்பி
நாடகம்..ஏமாறுவாரா
ராதிகா?

நீ இல்லனா செத்துடுவேன்
கோபி ராதிகா வீட்டை விட்டு வெளியே வரும் நேரத்தில் ராதிகா வீட்டுக்கு வரும் மூர்த்தி கோபியை பார்த்துவிடுகிறார். வீட்டைவிட்டு வெளியே போனவன் நேர இங்க வந்து இருக்கானா திருந்தாத ஜென்மம் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு ராதிகா வீட்டிற்குள் செல்லும் மூர்த்தி, ராதிகா..ராதிகா என சத்தம் போட்டு கத்துகிறார். அப்போது அங்குவரும் ராதிகாவிடம் இப்போ உனக்கு சந்தோஷமா, நல்லவ மாதிரி வேஷம் போட்டு உன் காரியத்தை சாதிச்சிட்டல என கோபத்தின் உச்சத்தில் மூர்த்தி கத்துகிறார்.

ப்ளீஸ் நொந்து போய் இருக்கேன்
என் பையனால 2 பொண்ணுங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கே நான் அவ்வளவு தூரம் வருத்தப்பட்டேன். ஆனால் இங்க வந்து பார்த்தா கோபி வீட்டில் இருந்த போறான், நீ இவ்வளவு நடந்தும் கோபியை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சா என அர்த்தம். இதைக் கேட்ட ராதிகா, நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன். நீங்க வேற ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார்.

எல்லாத்துக்கும் ஓரளவு இருக்கு
இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த சந்துரு, ஒரு கட்டத்தில் பெருமையை இழந்து,போதும் நிறுத்துங்க சார் உங்கவீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாத்துக்கும் ஓர் அளவு இருக்கு. உங்களுக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா, எங்களுக்கு குடும்பம் இல்லையா? என் தங்கச்சி வாழ்க்கை கெடுத்தது கோபி, என் பொண்டாட்டி பாக்யா தான்னு சொல்லாம பழகுனது உங்க பையன் தானே..இப்ப கூட அவர் ஏன் இங்க வந்தாருன்னு கேட்காம நீங்க பாட்டுக்கு கத்துறீங்க என சந்துரு கத்த, மூர்த்தி மன்னிச்சிடுங்க என்று கூறி அங்கிருந்து வெளியேறுகிறார்.

கோபியை ஏற்றுக்கொள்வாரா?
நம்மளையே இப்படி டார்ச்சர் செய்றாங்கன்னா கோபியை எப்படி பண்ணிருப்பாங்க என்று ராதிகாவிடம் சந்துரு கேட்கிறார் இதைக்கேட்ட ராதிகா எனக்கும் அதான் தோணுது என கோபி மேல் பரிதாப்படுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ராதிகா கோபியின் பரிதாப நிலையை நினைத்து ஏற்றுக்கொள்வாரா? மாட்டாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.