பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..அனைவர் முன்னிலையிலும் தலைகுனிந்து நின்ற பாக்கியா!

சென்னை : இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு.

நேற்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு தெரியாமல் இனியா அவரது அப்பா கோபியுடன் வெளியில் சென்று விடுகிறாள். மகளை காணாமல் பதறிப்போன பாக்கியா பள்ளிக்கு சென்று பார்த்த போது பள்ளியிலும் இனியா இல்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வரும் வழியெல்லாம் இனியா எங்கே போனாள் என்று புலம்பியபடி வீட்டிற்கு திரும்புகிறார்.

கோபியுடன் வந்த பாக்யா

கோபியுடன் வந்த பாக்யா

வீட்டில் சண்டைக்காக காத்திருக்கும் ஈஸ்வரி இனியா தொலைந்து போனதற்கு நீ தான் காரணம் என மிகவும் கடுமையாக பேசுகிறார். அதை அடுத்து ஜெனியிடம் இருவரும் சென்று போலீசில் புகார் அளிக்கலாம் என பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில், இனியா கோபியுடன் வந்து இறங்குகிறாள். இதையடுத்து, பாக்யா நிம்மதி அடைந்தாள்.

பயந்த பாக்கியா

பயந்த பாக்கியா

இதையடுத்து, இன்றைய எபிசோடில், கேட்டரிங் ஆர்டருக்கான மெசேஜ் பாக்யாவிற்கு வருகிறது. இதையடுத்து, எழில் அம்மாவை அழைத்துக்கொண்டு இன்டர்வியூக்கு செல்கிறான். அங்கு இருப்பவர்களை பார்த்து பயந்த பாக்கியா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு எழில், இதுதான் என்னுடைய முதல் இன்டர்வியூ என்கிறாள். என்னம்மா இதெல்லாம் பார்த்து பயப்படாதமா, நீ எவ்வளவு தைரியமான ஆளு தெரியுமா? என பாக்கியாவை எழில் பாராட்டி பேசுகிறார்.

இன்டர்வியூவுக்கா வந்தீங்க

இன்டர்வியூவுக்கா வந்தீங்க

இன்டர்வியூக்கு பிரபலமான கேட்டரிங்கை சேர்ந்த பலரும் அங்கு இருக்கிறார்கள். அதோடு இன்டர்வியூ செய்பவர் நீங்கள் இன்டர்வியூவுக்கா வந்திருக்குறீங்க என அவரை சந்தேகமாக கேட்கிறார். உடனே, ஆமார் சார் எனக்கு மெசேஜ் வந்தது என்கிறார். ஆமாம், நீங்க என்னென்ன பங்ஷனுக்கு சமைத்து இருக்கீங்க என கேட்க, நான் மசாலா பொடி தயாரித்து இருக்கிறேன், பிறந்த நாளுக்கு சமைத்து இருக்கிறேன் என பாக்கியா சொல்ல அங்கிருப்பார்கள் சிரிக்கின்றனர்.

அவமானமடைந்த பாக்கியா

அவமானமடைந்த பாக்கியா

இதை தொடர்ந்து பாக்யாவிடம் பயோடேட்டாவை கேட்க பயோடேட்டானா என்ன என கேட்கிறார். பயோடேட்டானா என்னனு கூட தெரியாதா கேட்கிறார் இதைப்பார்த்த மற்றவர்கள் பாக்கியாவை பார்த்து சிரிக்கின்றனர். இதனால், அவமானம் அடைந்த பாக்கியா இதுபற்றி ஜெனி, எழில் எதுவுமே என்னிடம் சொல்லவில்லையே என மனதிற்குள் புலம்பிக்கொண்டு தலைகுனிந்து நிற்கிறார். சிறிது நேரம் கழித்து 15 நிமிடம் தான் கொடுக்கப்படும் அதற்குள் நாங்கள் கொடுக்கும் பொருட்களை வைத்து டிஸ் செய்து கொடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X