ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. தப்பை மறைக்க படாதபாடுபடும் கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று !

சென்னை : பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி தப்பை மறைக்க படாதபாடுபட்டு வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இரவு 8.30 மணி ஆகிவிட்டால் போதும் இல்லத்தரசிகள், சரியாக டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள். இந்த தொடரில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா ஷெட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.

இன்றைய எபிசோடு

இன்றைய எபிசோடு

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில், பாக்கியாவின் ஆபீசுக்கு வந்த ராதிகா, ஒரு மணி நேரத்தில் அத்தனை டிஷ்களையும் செய்து அசத்தீட்டீங்க என்று பாராட்டினார். உங்க பிசினஸ் ரொம்ப நல்லா வரும் பாருங்க என்று வாழ்த்தினார். பின்னர் பாக்கியா, ஒரு நாள் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும். நீங்க மட்டும் இல்ல வீட்ல இருக்க எல்லோரும் உங்க ஹஸ்பண்டையும் கூட்டிட்டு வாங்க அவரை நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லை என சொல்கிறார். உடனே பாக்கியா தயங்கிக்கொண்டே நாங்க எல்லாரும் வரோம். ஆனால், அவர் என் கூட வெளியில வரமாட்டாரு என்று கூறுகிறார்.

உண்மையை சொன்ன செல்வி

உண்மையை சொன்ன செல்வி

இவர்கள் இருவரும் பேசியதை கேட்டுகொண்டிருந்த செல்வி, மேடம் அதெல்லாம் இல்லை. சாருக்கு அக்காவை அவ்வளவாக பிடிக்காது, அக்காவை எங்கையும் கூட்டிட்டு போகமாட்டாரு, அக்கா கூப்பிட்டாலும் வரமாட்டாரு, அவர் ஒருமாதிரியான டைப், இந்த அக்காத்தான் புருஷன், புருஷனு சொல்லிட்டு இருக்காங்க என்று உண்மையை உடைத்து கூறி விடுகிறார்.

டீச்சரின் ஹஸ்பண்ட் சாடிஸ்ட்

டீச்சரின் ஹஸ்பண்ட் சாடிஸ்ட்

இதன் பிறகு வீட்டுக்கு வந்த ராதிகா கோபியிடம் டீச்சரை பார்த்தேன் என சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். . மேலும் டீச்சரை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன். அவங்களும் வீட்டுக்கு வருவதாக சொல்லியிருக்காங்க என கூறிவிட்டு டீச்சரின் ஹஸ்பண்ட், அவங்க கூட எங்கேயும் வெளியே வர மாட்டாராம் சாடிஸ்ட் என நினைக்கிறேன் என்று கூறுகிறார். இதைக்கேட்ட கோபி, அவங்க குடும்ப விஷயம் நமக்கு எதுக்கு என அப்படியே பேச்சை மாற்றுகிறார்.

100 டிஷ் சமைச்சுட்டேன்

100 டிஷ் சமைச்சுட்டேன்

அதன் பிறகு வீட்டில் கோபி போன் நோண்டிக் கொண்டே இருக்க அப்போது ரூமுக்குள் வந்த பாக்கியா என்னால முடியாது என்று சொன்னீங்களே ஒரு மணி நேரத்துல 100 டிஷ் சமைச்சுட்டேன், பாத்திங்களா என சொல்ல கோபி இப்ப என்ன உன்ன பாராட்டிகிட்டே இருக்கணுமா என கேட்டு பாக்கியாவை முறைக்கிறார்.

புலம்பும் கோபி

புலம்பும் கோபி

நைட், ராதிகா கோபிக்கு போன் செய்ய கோபி போனை எடுக்காமல் கட் செய்து விடுகிறார். பாக்கியா, யாரு இந்த நேரத்துல போன் பண்றது என கேட்க ஏதோ ராங் நம்பர் என கூறி விடுகிறார். பின்னர் பாக்யாவுக்கு தெரியாமல் வெளியே சென்று போன் பேச ராதிகா ஒரு வாரமா என்னிடம் நைட்டில் பேசுவதே இல்லை என கோபத்துடன் போனை வைத்து விடுகிறார். ரூம்ல இவ படுத்தறா போன்ல அவ படுத்துறா முடியலடா என கோபி புலம்புகிறார்.

விரைவில் மாட்டுவார்

விரைவில் மாட்டுவார்

இரண்டு பெண்களை ஏமாற்றிவிட்டு செய்த தப்பை மறைக்க படாதபாடுபட்டு வருகிறார் கோபி. என்னைக்கு கையும் களவுமாக கோபி மாட்டுவார் என்று பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X