பாக்கியலட்சுமி டீம் பங்கேற்ற ராஜு வூட்ல பார்ட்டி.. என்ன கோபி வரலையா.. ராதிகாவை கலாய்த்த எழில்!
சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்ந்து முதன்மையான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் சேனலின் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது பாக்கியா மற்றும் கோபி இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் டிவியின் பிரம்மாண்டமான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடரின் நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளும் புதிய கிரியேட்டிவிட்டி மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் பிரியங்கா உள்ளிட்டவர்கள் தொகுப்பாளர்களாக காணப்படுகின்றனர். ஒரு பிரபலத்தை வைத்து அவர்களின் சொந்த வாழ்க்கையையும் கேரியரையும் குறித்த கேள்விகளை அடுக்கி அதன்மூலம் அவர்களின் வாயை கிளறி, இந்த நிகழ்ச்சியில் ஃபன் செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பு விருந்தினராக அமலா பால்
அந்த வகையில் கடந்த வாரத்தில் நடிகை அமலா பால் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அவரிடம் அவரது சிறுவயது காதல்கள் உள்ளிட்டவை குறித்து கேள்விகள் அடுக்கப்பட்டன. அவரும் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அனைத்திற்கும் உடனடியாக பதிலைக் கூறி ரசிகர்களை கவர்ந்தார்.

பாக்கியலட்சுமி டீம் பங்கேற்பு
இதனிடையே இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் அந்த சேனலின் சிறப்பான நிகழ்ச்சியாக காணப்படும் பாக்கியலட்சுமி டீம் கலந்துக் கொண்டுள்ளனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரின் ப்ரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கணவனை கைக்குள் போட்டிருப்பேன்
அதன்படி இந்த நிகழ்ச்சியில் பாக்கியா, ராதிகா மற்றும் எழில் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். ராதிகாவாக நடித்துவரும் ரேஷ்மாவிடம் அவர் பாக்கியாவாக நடித்திருந்தால் தற்போதைய பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்ட போது, தான் ராதிகாவாக மாறியிருப்பேன் என்றும் கணவனை கைக்குள் போட்டுக் கொண்டிருந்திருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.

கோபியை காதலித்திருக்க மாட்டேன்
இதேபோல பாக்கியாவிடம் அவர் ராதிகாவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு கோபி போன்ற ஒருவரை காதலித்திருக்க மாட்டேன் என்று அவர் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கோபி கலந்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டப் போது, எழில், அவர் ராதிகா மட்டும் இருந்தால் தான் வருவார் என்று ரேஷ்மாவை கலாய்த்தார். இதையடுத்து செட்டே களைகட்டியது.

கோபி கேட்ட விவாகரத்து
தற்போது பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேட்ட விவாகரத்தை பாக்கியலட்சுமி தானே முன்வந்து அளித்துள்ளார். இதனால் கோபமடையும் கோபி, பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். தானாக வாழ்ந்துவிட முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார். ஆனாலும் எந்தவிதமான ரியாக்ஷனையும் காட்டாமல் அவரை அமைதியாக எதிர்கொள்கிறார் பாக்கியா.


Click it and Unblock the Notifications











