அடுத்தடுத்து ஜம்ப் பண்றாரு பப்லுன்னு சொன்னாரே.. இப்போ அவருடனே போஸ் கொடுத்துருக்காரு நிமேஷிகா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் அறிமுகமான சின்னத்திரை நடிகை நிமேஷிகாவுடன் இணைந்து கண்ணான கண்ணே சீரியலில் நடித்த பப்லு பிரித்விராஜ் வெளியிட்ட புகைப்படத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
58 வயதாகும் பப்லு பிரித்விராஜ் சீரியல் மட்டும் சினிமாவிலும் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பீனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த பிரித்விராஜ் கடந்த 2022ம் ஆண்டு தனது மனைவியை பிரிந்து விட்டார். அதன் பின்னர், ஷீத்தல் என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அவரும் பிரித்விராஜை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் பப்லுவுக்கு சரியான காதல் செட் ஆகவில்லை என்றும் அவர் அடுத்தடுத்து ஜம்ப் செய்துக் கொண்டே போக அதுதான் காரணம் என்றும் கூறியிருந்தார்.
அப்பா - பொண்ணு: சின்னத்திரையில் அப்பா வேடம் கொடுத்தாலே தனக்கு பிடிக்காது என சொல்லிக் கொண்டிருந்த பப்லு பிருத்விராஜ் அனிமல் படத்துக்குப் பிறகு நாக சைதன்யா நடித்த தண்டேல் படத்தில் சாய் பல்லவிக்கு அப்பாவாக நடித்திருந்தார். சன் டிவி சீரியலில் நிமேஷிகாவுக்கு அப்பாவாக பிரித்விராஜ் நடித்திருந்த நிலையில், பல மாதங்கள் கழித்து மீண்டும் அவருடன் சந்திப்பு நடத்திய நிலையில், அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பப்லு ரொம்பவே ஸ்வீட்: நடிகர் பப்லு பிரித்விராஜ் ரொம்பவே ஸ்வீட்டான பெர்சன். அவருக்கு காதல் சரியாக செட்டாகாததால் அவர் அடுத்தடுத்து ஜம்ப் செய்கிறார் என சமீபத்தில் அளித்த பேட்டியில் நிமேஷிகா கூறியிருந்தார். அவருடன் இணைந்து நடித்த அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார். மீண்டும் இருவரும் இணைந்து போஸ் கொடுத்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட்: ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சில நடிகைகள் உதவி இயக்குநர்களுடன் டோர் சாத்திக் கொண்டு பலான வேலை பார்த்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்புகளை பெறுவதை தான் நேரிலேயே பார்த்திருக்கிறேன் என்றும் சீரியலில் நடிப்பது கூட சமீப காலமாக ரொம்பவே ரிஸ்க் ஆகி வருகிறது என்றும் நடிகைகள் செய்வது ரொம்பவே மோசமாக உள்ளது என்றும் பேசியிருந்தார். அடுத்தடுத்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நிமேஷிகாவுடன் பிரித்விராஜ் சந்திப்பு நடத்தியுள்ள நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து சீரியலில் நடிக்கப் போகின்றனரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications