காத்திருக்கும் பால்.. அட யாராச்சும் எடுத்துக் குடிங்கப்பா..!
சென்னை: வர வர மெளன ராகம் சுண்டி இழுக்கிறது.. சுண்ட காய்ச்சிய பால் படு தித்திப்பாக இருப்பது போல. காரணம், கீர்த்திகா குட்டிதான்.
பெங்காலி மொழியில் வெளியான சீரியல்தான் விஜய் டிவியில் தற்போது மெளன ராகம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. தினசரி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போதுசூடு பிடித்து வருகிறது.

சக்தி (கீர்த்திகா) குட்டிக்கும், கார்த்திக் சாருக்கும் இடையிலான ஊடல் கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் இன்று வரப் போகும் எபிசோட் குறித்த பிரிலியூட் படு க்யூட்டாக இருக்கிறது.
ஹாலில் கார்த்திக், சக்தி அமர்ந்துள்ளனர். அப்போது சக்தியை பால் குடிக்குமாறு கூறுகிறார்கள். அதற்கு அவர் எனக்கு வேண்டாம், கார்த்திக் சார் சாப்பிடட்டும் என்று மெதுவாக அந்தப் பக்கம் நகர்த்துகிறார்.
கார்த்திக் அதைப் பார்த்து அமைதியாக சக்தியிடமே நகர்த்துகிறார். அடுத்து ஆரம்பிக்கிறது பார்வை விளையாட்டு.. சக்தி முறைக்க, கார்த்திக் பதிலுக்கு முறைக்க இருவரும் மாறி மாறி பால் டம்பளரை அங்குமிங்கும் நகர்த்தி விளையாடுகின்றனர்.
சக்தி குட்டியின் க்யூட் பார்வை பரிமாறல் படு சுவாரஸ்யமாக, அழகாக இருக்கிறது. சரி சரி கடைசியில் யார் பால் எடுத்து குடிச்சதுன்னு தெரியலை.. இன்னிக்கு ராத்திரிதான் தெரியும். .மறக்காம பாருங்க.. !


Click it and Unblock the Notifications











