twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமாம்.. குழந்தை நட்சத்திரங்கள் எந்த கேட்டகிரியில வர்றாங்க...?

    |

    சென்னை: இப்போது சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலுமே குழந்தைகள் நடிச்சு நட்சத்திரங்களா ஜொலிக்கறாங்க. அந்த காலத்துல ஒன்றிரண்டு குழந்தை நட்சத்திரங்கள் மட்டும்தான்.

    டிவி ரியாலிட்டி ஷோக்கள் கூட குழந்தைகளுக்குன்னு ஸ்பெஷலா நடத்தறாங்க. இதுக்கு குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் கூட தேவையான நேரத்தில் விடுமுறை தந்து, அன்றன்று நடத்திய பாடங்களை வாட்ஸாப்பில் அனுப்பி வைக்கறாங்க.

    குழந்தைகளும் அம்மாவின் உதவியோடு படிப்பிலும் சோடை போறதில்லை. படிப்பிலும் படு சுட்டியாக இருந்து, பெற்றோருக்கு மட்டுமில்லாம படித்த பள்ளிக்கும் படிப்பு, எக்ஸ்டரா திறமைன்னு ரெண்டு விதத்திலும் பெருமை சேர்த்துடறாங்க.

    எதன் அடிப்படையில்

    எதன் அடிப்படையில்

    குழந்தை தொழிலாளர்கள் கேட்டகிரியில் இவங்க வர்றாங்களா, இதிலிருந்து இவர்களுக்கு விதிவிலக்கு அளித்தது எதன் அடிப்படையில் என்கிற கேள்வி வருது.

    பேபி ஷாம்லி

    பேபி ஷாம்லி

    பேபி ஷாலினி,பேபி ஷாம்லி இவங்களில் பேபி ஷாம்லி ரொம்ப குழந்தை தனம் உள்ளவராக இருந்தாராம். அவருக்கு மூட் இருந்தாதான் கேமிரா முன்னாடி வந்து நிப்பாராம்.

    காத்து இருக்கும்

    காத்து இருக்கும்

    இல்லேன்னா சட்டுன்னு படுத்து தூங்கிருவார்னு சொல்றாங்க. முழிக்கற வரைக்கும் படக்குழுவே காத்து இருக்கும்னு அப்பவே சொல்லி இருக்காங்க. அப்படீன்னா மணிரத்னம் சார் அஞ்சலி படத்தில் அத்தனை குழந்தைகளை வச்சு எப்படி வேலை வாங்கி இருப்பார். பாவம்தான்...

    மரியாதை

    மரியாதை

    இயக்குநர் ஷங்கரின் அந்நியன் படத்துல நடிச்ச குழந்தை, நான் சாகற மாதிரி பாடையில் படுக்கமாட்டேன்னு கறாரா சொல்லிட்டு போயிருச்சாம்.
    அவரை சமாதானப் படுத்தவே ஒரு வாரம் ஆச்சு.. அந்த குழந்தைக்கு செட்ல எல்லாரும் மகாராணி மாதிரி மாரியாதை குடுத்து சும்மாவே உட்கார வச்சிருந்தாங்கன்னு கூட ஒரு தகவல் வந்துச்சு.

    கஷ்டம்

    கஷ்டம்

    அப்புறம் அந்த பெண் குழந்தை தானாகவே நடிக்க ஒத்துக்கிச்சாம். இப்படி குழந்தைகளை வச்சு படம் சூட் பண்றதும் ரொம்ப கஷ்டம்தான். அதோட குழந்தைங்க வேஷத்துக்கு குழந்தையைத்தான் நடிக்க வைக்க முடியும்? பெரியவங்களுக்கு எப்படி குழந்தை வேஷம் போடறது... உங்க கஷ்டம் புரியுது...

    ஆனா... எல்லாருக்கும் இந்த கேள்வி ஏழறது சகஜம்தானே...!

    English summary
    TV's reality shows are also spacious for kids. Even children studying the school will also be able to leave the school on a daily basis and send it to Watsap.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X