சுபத்திரை நிலைமைதான் தாத்தா இப்போ எனக்கும்....!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி தாத்தாகிட்ட சொல்லவும் முடியாம சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கறா.

அதான் பீச்சுல பசங்க லவ்வர்ஸ் சுத்தினா கல்யாணம் செய்து வைக்கற புனிதமான பணியில் இருக்காங்கள்ல அவங்க இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடறானுங்க.

ரவிக்கும் மனசு சரியில்லை...பாக்கியலட்சுமிக்கும் மனசு சரியில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன?

ரவி போயிடுங்க

ரவி போயிடுங்க

இதுக்குத்தானே ரவி ஆசைப்பட்டீங்க... தயவு செய்து இந்த இடத்தை விட்டு போயிருங்கன்னு பாக்கிய லட்சுமி அழறா... நானும் வேணும்னு செய்யலை பஞ்சு.. நான் தாலி கட்டலேன்னா அவன் கட்டிடுவேன்னு பயமுறுத்தினான்...அதான் கட்டிட்டேன்...

ஒண்ணும் இல்லை

ஒண்ணும் இல்லை

இப்போ கூட ஒண்ணும் இல்லை பஞ்சு..மனசுக்கு பிடிக்காத எதையும் யாரும் சுமக்கனும்னு கட்டாயம் இல்லை. வாட்சை தூக்கி கடலில் போட்ட மாதிரி தாலியையும் போட்டுடுங்கன்னு ரவி சொல்றான்.

அவ்ளோ பிடிக்கும் ரவி

அவ்ளோ பிடிக்கும் ரவி

உங்களை பிடிக்காதுன்னு இல்லை ரவி...எனக்கு அவ்ளோ பிடிக்கும்...ஆனா எங்க வீட்டு சூழநிலையால உங்களை நான் காதலிக்க முடியாதுன்னுதான் ஒதுங்கினேன்னு ரவியை பட்டர் பிஸ்கட்டுன்னு சொல்லி கட்டிக்கறா பாக்கிய லட்சுமி. பஞ்சு மிட்டாய்னு கொஞ்சறான் ரவி.

கல்யாணம் கமலா

கல்யாணம் கமலா

இப்போ நேர போயி அண்ணிகிட்ட நடந்த விஷயத்தை சொல்லிடலாமா பஞ்சுன்னு ரவி கேட்கிறான். வேணாங்க... கமலா கல்யாணம் வேற வருது. நம்ம கல்யாணத்தால அவங்களுக்கு பிரச்சனை எதுவும் வர கூடாதுன்னு சொல்றா. அதுவரைக்கும்..நீங்க உங்க வீட்டில் இருங்க . நான் என் வீட்டில் என்று மணி சார் படம் போல பேசிக்கறாங்க.

தாத்தா வீட்டில்

தாத்தா வீட்டில்

வீட்டில் தாத்தாவிடம் நடந்த விஷயத்தை மறைக்க மனசில்லை. தன்னை நம்பின தாத்தாவுக்கு துரோகம் செய்யக் கூடாதுன்னு தாத்தா ரூமுக்கு போறா. வாம்மா பாரதம் படிச்சுக்கிட்டு இருக்கேன்... கல்யாண காண்டம்...

சுபத்திரை அர்ஜுன்

சுபத்திரை அர்ஜுன்

சுபத்திரையும், அர்ஜுனனும் காதலிக்கறாங்க. சுபத்திரை கண்ணனின் தங்கை. அர்ஜுனன் கண்ணனின் நண்பன். நண்பனுக்கு துரோகம் செய்யலாமா என்பது அர்ஜுனனின் பயம்... அண்ணனுக்கு தெரியாம காதலிக்கலாமான்னு சுபத்திரைக்கு பயம். இருந்தாலும் சூழ்நிலையால் அர்ஜுனன் சுபத்திரையை யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்க வேண்டியதாகிப் போகிறது. சுபத்திரை நிலைமை

இப்போ சுபத்திரை

இப்போ சுபத்திரை

எப்படி அண்ணனிடம் சொல்றதுன்னும், அர்ஜுனன் நண்பனிடம் எப்படி சொல்வது என்றும் தவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னு தாத்தா சொல்ல...சுபத்திரை நிலைமை யாருக்கும் வர கூடாது தாத்தான்னு பாக்கியலட்சுமி அழ.. நீ எதுக்கும்மா அழறேன்னு கேட்கறார். நானும் சுபத்திரை நிலையில இருக்கேன் தாத்தா.. எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொல்றா...

யாருடன் கல்யாணம் ஆச்சுன்னு கூட கேட்காத தாத்தா கண்டபடி திட்டிட்டு கிளம்பிடறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X