ஒரே ப்ரோமோல தட்டி தூக்கிட்டீங்களே...பாக்யலட்சுமியை பாராட்டும் இல்லத்தரசிகள்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் டாப் 5 சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்ற சீரியல் என்றால் அது பாக்யலட்சுமி தான். ஒரு இல்லத்தரசியின் மனக்குமுறலை சொல்லும் கதை தான் பாக்யலட்சுமி.

மூன்று வளர்ந்த பிள்ளைகளின் தாயான பாக்யா. குடும்பம், கணவர், பிள்ளைகள், மாமனார், மாமியார் இது தான் உலகம் என நினைத்து அவர்களுக்காகவே வாழும் குடும்ப தலைவி. ஆனால் அவரை பிடிக்காமல் ஒதுக்கும் கணவர். எப்போதும் யூத் மூடில், திருமணமாகி கணவரை பிரிந்து பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தோழியுடன் நெருக்கமாக இருக்க வாய்க்கு வந்த பொய்களை சொல்லி வரும் நபர்.

கணவர் ஊதாசீனப்படுத்துவதால் தனக்கென் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் பாக்யா, இளைய மகன் எழிலின் உதவியுடன் சொந்தமாக மசாலா பொடி பிசினசை துவங்குகிறார். அடுத்தடுத்து பிசினசை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் முயற்சிகளில் இறங்குகிறார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி சாதிக்க துடிக்கும் இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டங்களை, சுவாரஸ்யமாக சொல்லுவது தான் பாக்யலட்சுமி சீரியலின் கதை.

சுவாரஸ்யமாக சென்ற கதை

சுவாரஸ்யமாக சென்ற கதை

பிசினஸ் துவங்க பாக்யா அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சனைகள், தோழியுடன் நெருக்கமாக இருக்கும் போது மகன் எழிலிடம் சிக்கும் கோபி, அம்மா பாக்யாவின் சந்தோஷத்திற்காக அப்பாவை பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைக்கும் எழில் என அடுத்தடுத்து பல திருப்பங்கள், சுவாரஸ்யங்களுடன் ரசிக்கும் படியாக சென்று கொண்டிருந்தது பாக்யலட்சுமி சீரியல்.

டிராக் மாறிய கதை

டிராக் மாறிய கதை

இதற்கிடையில் பாக்யா - ராதிகா இடையேயான நட்பை உடைக்க கோபி செய்யும் வேலைகள், ராதிகாவிற்கும் கணவருக்கும் இடையேயான குடும்ப பிரச்சனை வேறு. இதனால் கதையின் போக்கு பாக்யாவை விட்டு நகர்ந்து, ராதிகா - கோபி இடையேயான உறவு பற்றி சொல்வதாக போய் கொண்டிருந்தது. இது பலரை சலிப்படைய வைத்தது.

டல்லடித்த டிஆர்பி

டல்லடித்த டிஆர்பி

ஆனால் கடந்த சில வாரங்களாக மூத்த மகன் செழியனுக்கும், மருமகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை, அமிர்தா குடும்பத்துடன் நெருக்கமாகும் எழில், பாக்யாவுக்கு டூவீலர் வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்து எழிலின் வாயை அடைக்கும் கோபி என கொஞ்சம் டல்லடித்து போய் கொண்டிருந்தது பாக்யலட்சுமி சீரியல்.

யோசிக்க வைத்த ப்ரோமோ

யோசிக்க வைத்த ப்ரோமோ

ஜெனியும், அவருக்கு வலிக்கும் என யாராவது நினைக்கிறீர்களா என கேட்பதாகவும், உதவிக்கு யாரும் இல்லாமல் வீட்டு வேலைகளையும் செய்து கொண்டு, தன்னையும் பாக்யா கவனித்து கொள்வதாகவும் ப்ரோமோ முடிகிறது. பல சினிமா, சீரியல்களில் கேட்ட பழைய டயலாக் என்றாலும், ஆமால்ல...அம்மாவுக்கு என்னைக்குமே லீவு இல்லையே என அனைவரையும் யோசிக்க வைப்பதாக இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

குவியும் இல்லத்தரசிகளின் ஆதரவு

குவியும் இல்லத்தரசிகளின் ஆதரவு

இந்த ஒரே ப்ரோமோ பாக்யலட்சுமி சீரியலின் டிஆர்பி.,ஐ எங்கோ கொண்டு போய் விட்டது. இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பாக்யலட்சுமி சீரியல் பெற்று விட்டது. கொரோனா லாக்டவுன் சமயத்தில், சமையலறையிலேயே நாள் முழுவதும் இருப்பதாக புலம்பிக் கொண்டிருக்கும் இல்லத்தரசிகள், இது தங்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளதாக சொல்ல துவங்கி விட்டனர். அந்த அளவிற்கு இந்த ப்ரோமோ பெண்களை கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X