»   »  நாளை டிவியில் பார்க்கலாம் பாகுபலியை, ஆனா...!!

நாளை டிவியில் பார்க்கலாம் பாகுபலியை, ஆனா...!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்தி, இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராஜமவுலியின் பாகுபலி படத்தை, மா டிவி நாளை ஒளிபரப்புகிறது.

Select City
Buy Baahubali - The Beginning (Tamil) (U/A) Tickets

பாகுபலி படம் கடந்த ஜூலை 10-ம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியானது.


தமிழ், தெலுங்கில் நேரடியாகவும், இந்தியில் டப்பிங் படமாகவும் வெளியானது. இந்தப் படத்துக்கு பிரமாதமான வரவேற்பும் வசூலும் கிடைத்தன. ரூ 250 கோடியில் தயாரான இந்தப் படம் ரூ 500 கோடிக்கும் அதிகமாகக் குவித்தது.


Bahubali to be aired tomorrow

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை மூன்று மொழிகளிலும் பெரும் விலைக்குப் போனது.


இன்னமும் கூட பல அரங்குகளில் இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் ஓடிக் கொண்டுள்ளது.


இந்த நிலையில் சிறப்புத் திரைப்படமாக இந்தப் படத்தை நாளை ஒளிபரப்புகிறது தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சியான மா டிவி.


ஆனால் ஒளிபரப்பாகப் போவது தெலுங்கு அல்லது தமிழ் பதிப்பு அல்ல. இந்திப் பதிப்பு!

English summary
The Hindi version of blockbuster movie Bahubali will be aired in Maa TV on Sunday, Oct 25th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil