ஷிவானி வாய் வரைக்கும் போய்ட்டு.. ரம்யா பாண்டியனுக்கு கேக் ஊட்டிய பாலாஜி!
சென்னை: காதலர் தினம் அதுவுமாக நண்பர்கள் அனைவரும் இருக்கும்போது பாலாஜி ரம்யா பாண்டியனுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் .
தற்போது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோக்கள் தான் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் நாலாவது சீசனில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட இளைஞர்களின் பலருக்கு ரோல் மாடலாக மாறி இருக்கும் பாலாஜி தற்போது முரட்டு சிங்கிள்ஸ் என தனது நண்பர்களுடன் காதலர் தினத்திற்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

முரட்டு சிங்கிள்ஸ்
அப்போது பிக்பாஸ் வீட்டில் அவருடன் ஒன்றாக இருந்த ஆஜீத், சனம் ரம்யாபாண்டியன், ஷிவானி ,கேப்ரில்லா அனைவரும் இருக்கும்போது எல்லோரும் முரட்டு சிங்கிள்ஸ் என கோஷமிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். ஆனால் அதில் கேக்டை சனம் ,ஆஜித், பாலாஜி ,ரம்யா பாண்டியன் நால்வர் மட்டும்தான் வெட்டினார்கள்.

கேக் வெட்டி
அதில் எல்லாரும் முரட்டு சிங்கிள்ஸ் டே என ஜாலியாக கத்திக் கொண்டு கேக் வெட்டுவதை ஓரக்கண்ணால் கையை இடுப்பில் கட்டிக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்த ஷிவானியைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளி கமெண்ட் போட்டு வருகிறார்கள் .

பற்றி எரிந்த காதல்தீ
இந்த வீட்டிற்குள் இவர்கள் இருவருக்கும் காதல் தீ பற்றிக்கொண்டு எரிந்ததை பற்றி இவ்வளவு நாளாக கலாய்த்து வந்த ரசிகர்கள் தற்போது என்ன கணக்கில் சிங்கிள்ஸ் டே கொண்டாடுகிறார்கள் என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். ரசிகர்கள் முழிப்பது பெரிதல்ல அந்த கூட்டத்தில் இருந்து கொண்டு ஷிவானி ஓரக்கண்ணால் முழித்துக் கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்
இதனைப் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் ஷிவானியை வைத்து மீன்ஸ்களைப் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இந்த வீடியோவை பாலாஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும் பாலாஜியின் ரசிகர்களும் ஷிவானியின் ரசிகர்களும் கமெண்ட்களை பொழிந்து வருகிறார்கள் .அதில் பலருடைய கேள்வி ஷிவானிக்கு கேக் ஊட்டலையா என்றுதான்.

வெறுப்பேத்தலாமா
என்னதான் எல்லோரும் ஒன்றாக கேக் வெட்டி என்ஜாய் பண்ணுனாளும் ஷிவானி யை மட்டும் இப்படி வெறுப்பேத்த கூடாது என்று ஷிவானியின் ரசிகர்களும் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .ஷிவனி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜியின் பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கும் போது இது போலத்தான் கலாய்த்த ரசிகர்கள் தற்போது ஷிவானியைக் கண்டு கொள்ளாத பாலாஜியை வைத்து மீண்டும் கலாச்சி வருகின்றனர் .

செம ஜாலிதான்
ரசிகர்கள் என்ன கிண்டல் பண்ண நாங்களே கிண்டல் பண்ணி விடுவோம் என்று அந்த குரூப்பில் இருந்த கேப்ரில்லாவும் தன்னுடைய பங்கிற்கு ஜாலியாக கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார். பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு என்று பாலாஜி கூறியிருப்பதை பார்த்து பலர் இவர்களுடைய ஹாட்டின் களை பறக்க விட்டு வருகிறார்கள் . அதில் அர்ச்சனாவும் தான் இந்த குரூப்பில் இல்லை என்றாலும் எனது ஹாட்டினையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று இரண்டு ஹாட்டின் களை காற்றிலே பறக்கவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்.

கரெக்ட் பண்ண முயற்சி
அதுவும் கேப்ரில்லா இப்பதான் அவன் வீடியோ போட்டு ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி இருக்கிறான் ஆனாலும் முரட்டு சிங்கிள் சென்று கேக் வெட்டுகிறான் என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார் .இதை பார்த்த அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோஸ்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











