விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும் கமல்: காரணம்...
சென்னை: கமல் ஹாஸன் துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்த கமல் ஹாஸனுக்கு நிஜமாகவே கோபம் வராதா என்று கேட்டு சிரித்தவர்கள் வியக்கும் வகையில் மகத்தை தாளித்து எடுத்தார். அதன் பிறகு கடந்த வார இறுதி நாட்களில் பார்வையாளர்களுக்கு எல்லாம் சுத்தமாக பிடிக்காத ஐஸ்வர்யாவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார்.
கமல் முகத்தில் அடித்தது போன்று பேசியதை கேட்டு ஐஸ்வர்யா கடுப்பானது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஐஸ்வர்யா
சென்றாயன் பற்றி நல்லவிதமாக பேசி சீன் போட முயன்ற ஐஸ்வர்யாவை பேச விடாமல் தடுத்து உட்காரச் சொன்னார் கமல். இது பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. தாடி பாலாஜியோ அப்பொழுதே கை தட்டிவிட்டார். நேற்று இரவு மாலை அந்த சம்பவம் பற்றி தாடி பாலாஜி, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் பேசினார்கள்.

ஐஸ்வர்யா
கமல் சார் ஐஸ்வர்யாவை பேச விடாமல் தடுத்தார் என்று ரித்விகா சொல்ல இல்லை இல்லை உங்களுக்கு தகுதியே இல்லை என்றார், அதுக்கு தானே நான் கைதட்டினேன், சூப்பரா கட் பண்ணினாரே என தாடி பாலாஜி திருத்தமாக கூறினார். கமல் சார் அங்க தான் நிக்கிறார், உண்மையாகவே அங்க தான் நிக்கிறார் என்று கூறி ஜனனி பெருமைப்பட்டார்.

பாவம்
கமல் சாருக்கு சுடச் சுட நெய் கதை மாறி ஆகிறது, கண்டிப்பாக ஆகிறது. அதாவது சுடச் சுட நெய் என்றால் நெய்யை வாயில் ஊற்றிவிட்டு துப்பவும் முடியல, விழுங்கவும் முடியல என்று பழமொழி சொல்வார்கள். கமல் சார் நிலை பாவம் அப்படித் தான் உள்ளது என்றார் தாடி பாலாஜி. என்னை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருக்கிறார்கள் என்று கமல் சார் பல முறை கூறியுள்ளார் என்றார் ஜனனி. ஜஸ்வர்யா அதட்டியபோது கமல் முகத்தில் பயங்கர கோபம் தெரிந்தது என்றார் விஜி.

ஸ்க்ரிப்ட்
ஏம்மா, ஊருக்கே தெரிந்த விஷயத்தை இப்பத் தான் புரிந்து கொண்டுள்ளீர்களா?. அவர் முகத்தில் கோபம் தெரிந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதுவும் இந்தியில் காப்பியடிக்கப்பட்டதா என்று வீடியோவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால், கமல் ஹாஸன் நிலை கொஞ்சம் பாவம் தான். பிக் பாஸ் எழுதிக் கொடுப்பதை வாசித்துவிட்டு பார்வையாளர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











