தாடி பாலாஜிக்கு மொட்டையடித்த மும்தாஜ்: காரணம் 'பேட்டி' ஜனனி
Recommended Video

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஜனனிக்காக தாடி பாலாஜி மொட்டையடித்துள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் டேனி வெளியேறிய பிறகு 8 பேர் தான் உள்ளனர். ஆண்களில் தாடி பாலாஜி, சென்றாயன் மட்டுமே இருக்கிறார்கள். சென்றாயனை ஜனனி நாமினேட் செய்துள்ளார்.
இந்நிலையில் தாடி பாலாஜி ஜனனிக்காக மொட்டை அடித்துள்ளார்.
தாடி பாலாஜி
நீங்க எனக்காக மொட்டை அடித்தால் நான் சேஃபாக இருப்பேன் என்று ஜனனி தாடி பாலாஜியிடம் தெரிவித்தார். உடனே அவர் என் மகளுக்காக செய்வதாக நினைத்து மொட்டை அடிக்கிறேன் என்றார். மும்தாஜ் பாலாஜிக்கு மொட்டை அடித்துவிட்ட ப்ரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

எச்சரிக்கை
தாடி பாலாஜி அதிகமாக புறம் பேசுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த நித்யா கூட புறம் பேசாதே என்று பாலாஜிக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தார். ஜனனியின் அம்மாவும், தங்கையும் தாடி பாலாஜியிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினார்கள். இந்நிலையில் பாலாஜி ஜனனிக்காக மொட்டை அடித்துள்ளார்.

மகள்
என் மகள் போர்ஷிகா எப்படியோ, ஜனனியும் எனக்கு அப்படித் தான் என தாடி பாலாஜி அடிக்கடி கூறுவார். மேலும் ஜனனியை தங்கம் தங்கம் என்று அழைப்பார். ஜனனியும் பாலாஜி மீது பாசமாக உள்ளார். இருப்பினும் பாலாஜி ஜனனியை பற்றி புறம் பேசியுள்ளார். ஒட்டி உறவாடினாலும் புறம் பேசுவதால் தான் அவரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜனனியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

எவிக்ஷன்
புறம் பேசிய டேனி வெளியே சென்றுள்ள நிலையில் அதே குணம் உள்ள தாடி பாலாஜி இந்த வாரம் அனுப்பி வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐஸ்வர்யாவை மட்டும் அல்ல தாடி பாலாஜியையும் பிக் பாஸ் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். பாலாஜி ஜனனியை மகளாக பார்க்க, நித்யாவோ ஐஸ்வர்யாவை தன் மகளாக பார்த்தார். தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார் நித்யா.


Click it and Unblock the Notifications











