என்னமா நடிக்கிறா, செருப்பை கழட்டி அடிக்கணும்: நித்யா மீது கொலவெறியில் பாலாஜி
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்துவிட்டார் பாலாஜி.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அரசியல் கட்சி துவங்கியுள்ள கமல் ஹாஸனை இப்படி புருஷன், பொண்டாட்டி பிரச்சனையை பஞ்சாயத்து செய்யவிட்டுவிட்டார்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

பொறுமை
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் பாலாஜி பொறுமையாக இருந்தார். நித்யா என்ன தான் திமிர்தனம் செய்தாலும் பொறுத்துக் கொண்டார். எப்படியாவது நித்யாவுடன் சமாதானமாகிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டார்.

நடிப்பு
முன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை துவங்கிவிட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.

செருப்பு
செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் என்று நித்யாவை பற்றி கமெண்ட் அடித்தார் பாலாஜி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை தவிர மற்றவர்கள் செலிப்ரிட்டி என்றார் நித்யா. அதை கேட்ட கமலோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் நீங்களும் செலிப்ரிட்டியாகிவிட்டீர்கள் என்றார். இந்நிலையில் தான் பாலாஜி இப்படி கமெண்ட் அடித்துள்ளார்.

மகத்
அவ நடிப்பை பார்க்க பார்க்க பிரஷர் ஏறுகிறது. 15 பேரா அவளிடம் கேட்டார்கள் என்று வெங்காய விஷயம் குறித்து மகத், ஷாரிக்கிடம் பேசினார் பாலாஜி. நித்யா மீது முதன்முதலாக கோபத்தை காட்டியுள்ளார் பாலாஜி.

நடிப்பு
முன்பெல்லாம் நித்யா பற்றி ஜாடை மாடையாக பேசாமல் இருந்த பாலாஜி தற்போது கச்சேரியை துவங்கிவிட்டார். 67 கேமராவை தாண்டி நடிச்சுக்கிட்டு இருக்கா என்று நித்யாவை தாண்டி செல்லும்போது முணுமுணுக்கிறார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











