சினேகாவால் நான் அழகானேன்!... பிரசன்னா
விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒருகோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் தம்பதியினர் சினேகா -பிரசன்னா தங்களின் காதல் நினைவுகளையும், திருமணம், சமையல் என பல நினைவுகளை அசைபோட்டனர்.
மிமிக்ரி, பேச்சு என பேசிப் பேசியே என்னைக் கவர்ந்தார் பிரசன்னா என்றார் சினேகா. உடனே இடையில் புகுந்த பிரசன்னா, தசாவதாரம் படத்தில் அப்பாராவ் கதாபாத்திரம் பேசும் டயலாக் பேசி கரெக்ட் செய்தேன் என்றார்.
இப்பவும் கரெக்ட் பண்ணுங்களேன் என்று பிரகாஷ்ராஜ் கூறவே உடனே பேசி அசத்தினார் பிரசன்னா.

சாதுவான பொண்ணு
நிகழ்ச்சியில் பேசிய சினேகா நான் சாதுவான பொண்ணு என்றார். சினிமாவைப் பற்றி பேசவே கூடாது என்று கண்டிசன் உள்ள குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தேன் என்றார்.

அழகிய தீயே…
தான் நடிக்க வந்த கதையைக் கூறிய பிரசன்னா, அழகிய தீயே என்ற படம் மட்டும் கிடைக்காவிட்டால் நான் இவ்வளவு பெரிய நடிகனாக உயர்ந்திருப்பேனா என்று தெரியவில்லை என்றார்.

சைனீஸ் சாம்பார் வைப்பேன்
திருமணத்திற்கு முன்பு வரை சமையலறைப் பக்கம் போகாத சினேகா இப்போது நன்றாக சாம்பார் வைப்பதாக கூறினார். ( அப்போ விளம்பரத்தில வைக்கிற சாம்பார் யார் சமைச்சது பிரசன்னா?)

சினேகாவால் அழகானேன்
காதல் வந்தாலே அழகாகிவிடுவார்கள் என்பார்கள். சினோகாவினால் நான் அழகாகிவிட்டேன் என்றார் பிரசன்னா.

காமராஜர் மாதிரி தலைவர்
காதல் மட்டுமல்ல அரசியல் பற்றியும் பேசினார். தனக்குப் பிடித்த அரசியல் தலைவர் காமராஜர் என்றார். படிக்காத மேதையான காமராஜரைப் போல தலைவர் இன்றைக்கு யாரும் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











