பாரதி கண்ணம்மா சேர்வதுதான்... கெத்தா கண்ணம்மா கையை ...அடடா... வர்றான் பாரதி...!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் நல்லாருக்கு.கருத்துள்ள சீரியலாவும் இருக்கு. சீரியல்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாவும் இருக்கு.
இதை இப்படியே சொதப்பல் இல்லாமல் கொண்டு போனால் மக்களுக்கு நல்லதை சொன்ன திருப்தி கிடைக்கும்.
பாரதின்னாலே கண்ணம்மாதான்... பாரதி கொஞ்சுவதும் மனைவி கண்ணம்மாவை ஆணுக்கு பெண் இங்கே சமம் என்று கும்மியடி பாப்பா கும்மியடி என்பது போலத்தான் இருக்கும்.

கான்செப்ட்
பெண்கள் நிறம் கம்மியா இருந்தா யாரும் ரசிக்க மாட்டாங்க, கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க என்கிற காலம் நிஜ வாழ்க்கையில் எப்பொதோ மலை ஏறி போயாச்சுதான்.ஆனால்,இந்த ஊடகங்கள், சினிமா இவற்றில்தான் இன்னும் கருப்பு பெண்களுக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. இந்த கருப்பு கான்செப்ட் உண்மையில் மக்களுக்கு இல்லை... இது போன்ற ஊடகங்களுக்குத்தான் முதலில் தேவை.

வெள்ளை பொண்ணுங்களுக்குத்தான் மவுசு
சினிமா, டிவி சேனல்களில் வெள்ளை பொண்ணுங்களுக்குத்தான் மவுசு அதிகம். இதை இல்லேன்னு எந்த மீடியாவாவது சொல்லட்டுமே... முக லட்சணம்,அழகு இதெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாது. வெள்ளையா இருக்காங்களா... தமிழ் பேச தெரியலையா உடனே வாய்ப்பு.

பாரதியின் கருப்பு கண்ணம்மா
அந்த பாரதியோட கண்ணம்மா எப்படி இருந்தாங்களோ.. இந்த பாரதியின் கண்ணம்மா ரொம்ப கருப்பு. இவளுக்கு சித்தி கொடுமை வேற. பாரதியின் அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாதாம். இதை எல்லாம் மீறி பாரதி மேல அகிலனுக்கு நிச்சயம் பண்ணி இருக்கற அஞ்சலியின் லவ் டார்ச்சர்.

பாரதிக்கு மன உளைச்சல்
உடனடியா முடிவெடுக்கறான்.. கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்க இங்கே அஞ்சலி தனது பிறந்த நாள் விழாவில் தம்பி அகிலனை விட்டுட்டு அண்ணன் பாரதியை கல்யாணம் செய்துக்க துடிச்சுக்கிட்டு நிக்கறா.

கையை பிடிச்சு கெத்தா
அஞ்சலியின் பிறந்த நாள் விழாவிற்கு வரும் பாரதி, கண்ணம்மாவுடன் மாலையும் கழுத்துமா ,கண்ணம்மா கையைப் பிடிச்சுக்கிட்டு சும்மா கெத்தா நடந்து வர்றான். எல்லாரும் வேறு வகையில் அதிர்ந்து நிற்க, அஞ்சலி தனக்கு கிடைக்கலையே பாரதின்னு அழறா.

கெட்டவன் கையில
இந்த கண்ணம்மாவைத்தான் ஒரு கெட்டவன் கையில புடிச்சு கொடுக்கணும்...அதுதான் என்னோட ஆசைன்னு சித்தி தன் அம்மாவியிடம் சொல்லிக்கிட்டு இருந்தவங்க. மாயாண்டியை விட்டு கடத்திகிட்டு போக சொல்லி அவனையே கல்யாணம் செய்துக்க சொன்னவங்க.


Click it and Unblock the Notifications











