வேற லெவல் வெண்பா... பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் அசத்தல் பாத் டப் ஃபோட்டோஷுட்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் மிக பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, சீரியல் ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பதும் இந்த சீரியல் தான். மலையாளத்தில் ஒளிபரப்பான கருத்தமுத்து டிவி சீரியலின் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா என்றாலும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.

Recommended Video

Bharathi Kannamma setல் பட்டையகிளப்பும் Venba | Farina Azad, BK shooting

2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் 560 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கிறது. இதில் பாரதியாக அருண் பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியனும், வெண்பாவாக ஃபரீனா ஆசாத்தும் நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயின் கண்ணம்மாவிற்கு இருக்கும் அளவு ரசிகர்கள் கூட்டம் வில்லி வெண்பாவிற்கும் உண்டு.

சுவாரஸ்யமான பாரதி கண்ணம்மா

சுவாரஸ்யமான பாரதி கண்ணம்மா

பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் வெண்பா, அவரை திருமணம் செய்து கொள்ள பல சதி வேலைகளை செய்கிறார். ஆனால் ஹீரோவான பாரதி, கண்ணம்மாவை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார். வெண்பாவின் சதித் திட்டத்தால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிகிறார்கள். எட்டு வயது பெண் குழந்தைக்கு தந்தையான பாரதியை அடைய ரவுடிகள் உதவி, ஆள்கடத்தல் என பல வேலைகளை செய்கிறார் வெண்பா. இத்துடன் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஹேமா, அப்பாவிடமும், லட்சுமி, அம்மாவிடமும் வளர்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் பந்தம் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது சீரியல்.

பாரதி கண்ணம்மா இணைவு

பாரதி கண்ணம்மா இணைவு

இதுவரை பாரதி, கண்ணம்மா இடையேயான மோதல், வெண்பாவின் சதி என சென்று கொண்டிருந்த சீரியல், தற்போது குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமியை சுற்றி வருகிறது. மேலும் பாரதி, கண்ணம்மா இடையே மீண்டும் காதல் காட்சிகள் இடம்பெற துவங்கி உள்ளன. இதனால் வெண்பாவின் சதியை மீறி பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் சேர போகிறார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

கர்ப்பத்தை அறிவித்த ஃபரீனா

இந்நிலையில் சமீபத்தில் நிஜ வாழ்க்கையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா. இதனால் இனி அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க மாட்டார். அவருக்கு பதில் யார் வெண்பா கேரக்டரில் நடிப்பார். அல்லது வெண்பா கேரக்டர் நீக்கப்பட்டு, கதை வேறு விதமாக மாற்றப்படுமா என பல விதமான வதந்திகளும், கேள்விகளும் எழுந்தது.

வதந்திகளை முடித்த வெண்பா

வதந்திகளை முடித்த வெண்பா

ஆனால் அது எதுவும் உண்மையில்லை. பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கேரக்டரில் தான் தொடர்ந்து நடிக்க போவதாகவும், பிரசவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் தான் பிரேக் எடுத்துக் கொள்ள போவதாகவும் ஃபரீனா அறிவித்தார். மேலும் பாரதி கண்ணாம்மா சீரியலில் வெண்பா கேரக்டர் தொடரும், அதில் நானே தொடருவேன் என்றும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஃபரீனா.

வித்தியாசமான ஃபோட்டோஷுட்

வித்தியாசமான ஃபோட்டோஷுட்

இதைத் தொடர்ந்து பெரிய வயிறுடன் இருக்கும் ரீல் வீடியோக்கள், ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஃபரீனா. இதில் சமீபத்தில் வயிற்றில் மெகந்தி போட்டது போன்று ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நீச்சல் குளத்தில், தண்ணீருக்கு அடியில், சிவப்பு நிற உடையில், பெரிய வயிற்றை காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார் ஃபரீனா.

பாத்டப் ஃபோட்டோஷுட்

பாத்டப் ஃபோட்டோஷுட்

லேட்டஸ்டாக மஞ்சள் நிற மெல்லிய ஆடையில், பூக்கள் போடப்பட்ட பாத் டப்பில், தண்ணீரில் படுத்தப்படி அசத்தல் ஃபோட்டோ ஷுட்டை நடத்தி அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வழக்கம் போல் ஃபரீனாவின் இந்த ஃபோட்டோஷுட்டும் லைக்குகளை அள்ளி வருகிறது. ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். அதே சமயம் கவனமாக இருக்கும் படி பலர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சும்மாவே இருக்க மாட்டிங்களா

சும்மாவே இருக்க மாட்டிங்களா

கர்ப்ப காலத்திலும் விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி வீடியோ, ஃபோட்டோ என வெளியிட்டு வரும் வெண்பாவை சிலர் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா, இப்போ இது தேவையா, பாவம் அந்த குழந்தை என பல விதமாக விமர்சித்தும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

டிரெண்டாகும் கர்ப்பகால ஃபோட்டோஷுட்

டிரெண்டாகும் கர்ப்பகால ஃபோட்டோஷுட்

சமீப காலமாக நடிகைகள், குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பலர் கர்ப்ப கால ஃபோட்டோஷுட் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு முன் ஷமீரா ரெட்டி, கரீனா கபூர் போன்ற நடிகைகள் தான் கர்ப்பகால ஃபோட்டோஷுட் நடத்தினர். ஆனால் தற்போது ஃபரீனா மட்டுமல்ல, சமீபத்தில் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய ஜெனீஃபரும் 3வது, 4வது, 5வது மாதம் என மாத வாரியாக ஃபோட்டோ வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X