Barathi kannamma serial: பாரதி மாதிரி ஒரு புருஷன் யாருக்குத்தான் பிடிக்காது?

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு விழிப்புணர்வு சீரியல் என்று சொல்லலாம். கருப்பு கண்ணம்மாவை பிறந்த வீட்டில் அம்மா இல்லாத இந்த கண்ணம்மாவை சித்தி, வேலைக்காரி மாதிரி நடத்துறாங்க.

சித்திக்கு பிறந்த அஞ்சலி மிக அழகானவள், இவள் மிஸ் சென்னை பட்டம் வாங்கினவள். இவள் மீது சவுந்தர்யா அம்மாவின் இளைய மகன் அகிலன் ஆசைப்படறான். அவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க அந்தஸ்து பார்க்காமல் முடிவெடுக்கும் சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு என்றால் பிடிக்காது.

தனது மகள் வயிற்று பேத்தி கருப்பு என்பதால், அந்த குழந்தையை இதுவரை சவுந்தர்யா அம்மா தொட்டது கூட இல்லை. அதனால், அஞ்சலி வீட்டில் இருக்கும் கண்ணம்மாவை சவுந்தர்யா அம்மா ரொம்ப வெறுக்கறாங்க.

கண்ணம்மா பாரதி

கண்ணம்மா பாரதி

அகிலனுடன் அஞ்சலியை பெண் பார்க்கப் போகும் போதே, அஞ்சலியின் உடன் பிறவா சகோதரியான கருப்பு கண்ணம்மாவை பாரதிக்கு பிடித்துப் போகிறது. அன்றிலிருந்து அவளுக்கு அவளது வீட்டாரால் அநீதி இழைக்கப் படும்போது எல்லாம் ஆதரவாக நிற்கிறான்.அவர்கள் குடியிருக்கும் வீடு சவுந்தர்யா அம்மா,அதாவது பாரதி,அகிலனின் அம்மா சம்பந்திக்கு என்று கொடுத்த வீடு. அது மட்டும் இல்லாமல் அஞ்சலிக்குக் கார் பரிசாகத் தந்து இருக்காங்க.

பாரதியை அஞ்சலிக்கு தன்னை பெண் பார்க்க வந்த தம்பி அகிலனை விட, அவன் அண்ணன் பாரதியை பிடித்துப் போகிறது அஞ்சலிக்கு. அவனை தான் கட்டிக்கப் போறவனின் அண்ணன் என்று கூட பார்க்காமல் லவ் டார்ச்சர் செய்து வருகிறாள். பாரதி எத்தனையோ முறை சொல்லியும், அஞ்சலி கேட்காததால்,அஞ்சலி பிறந்த நாளின் போது, யாருக்கும் தெரியாமல், கண்ணம்மாவின் அப்பா சம்மதத்துடன், கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி.

பாரதியை அஞ்சலிக்கு தன்னை பெண் பார்க்க வந்த தம்பி அகிலனை விட, அவன் அண்ணன் பாரதியை பிடித்துப் போகிறது அஞ்சலிக்கு. அவனை தான் கட்டிக்கப் போறவனின் அண்ணன் என்று கூட பார்க்காமல் லவ் டார்ச்சர் செய்து வருகிறாள். பாரதி எத்தனையோ முறை சொல்லியும், அஞ்சலி கேட்காததால்,அஞ்சலி பிறந்த நாளின் போது, யாருக்கும் தெரியாமல், கண்ணம்மாவின் அப்பா சம்மதத்துடன், கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி.

தன்னை பெண் பார்க்க வந்த தம்பி அகிலனை விட, அவன் அண்ணன் பாரதியை பிடித்துப் போகிறது அஞ்சலிக்கு. அவனை தான் கட்டிக்கப் போறவனின் அண்ணன் என்று கூட பார்க்காமல் லவ் டார்ச்சர் செய்து வருகிறாள். பாரதி எத்தனையோ முறை சொல்லியும், அஞ்சலி கேட்காததால்,அஞ்சலி பிறந்த நாளின் போது, யாருக்கும் தெரியாமல், கண்ணம்மாவின் அப்பா சம்மதத்துடன், கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கறான் பாரதி.

அம்மா கோபம்

அம்மா கோபம்

சவுந்தர்யா அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாது. அப்படிப்பட்ட நிலையில் தனது செல்ல மகன் பாரதி கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துகிட்டு வந்தது பிடிக்காமல், அஞ்சலி கல்யாணத்தையும் நிறுத்திடறாங்க. இப்போது ஒரு வழியாக பாரதி அம்மாவை சமாதானப்படுத்தி,அஞ்சலி,அகிலன் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறான்.என்றாலும், கண்ணம்மாவை சவுந்தர்யா அம்மா இன்னும் ஏத்துக்கலை.

பாரதி மாமா கண்ணம்மா

பாரதி மாமா கண்ணம்மா

நிற பேதம், படிப்பு, அந்தஸ்து என்று எதையும் பார்க்காமல் கண்ணம்மாவை காதலித்து கல்யாணம் செய்துகொண்ட பாரதி,இன்னு இன்னும் என்று கண்ணம்மாவிடம் தனது காதலை காண்பித்து, அவளை தன் அன்பில் திக்குமுக்காட வைக்கிறான். புது போன் வாங்கிட்டு வந்து குடுத்து, நான் வெளியில் இருக்கேன் கண்ணம்மா. இந்த புது போனில் உன் மனசுக்கு பிடிச்சவங்களோட பேசுன்னு போயி, அவள் தனக்குத்தான் பேசுவாள்னு எதிர்ப்பார்த்து, ஏமாந்து பின் ரூமுக்குல் வர, கண்ணம்மா தனது புது போனில் அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அப்போதும் கோபம் கொள்ளாத பாரதி, உன் மனசுல அப்பா தான் முதலிடத்தில் இருக்கார்.கூடிய சீக்கிரம் அந்த இடத்தை நான் பிடிப்பேன் கண்ணம்மா... நீ எனக்குத்தான் போன் செய்வேன்னு காத்திருந்தேன்னு சொல்றான்.நெகிழ்ந்து போகிறாள் கண்ணம்மா. பாரதி மாதிரி ஒரு புருஷன் கிடைச்சால் யாருக்குத்தான் பிடிக்காது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X