Barathi kannamma serial: ஆஹா நீதான்மா பாரதி கண்ட புதுமை கண்ணம்மா!

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா இன்னிக்குத்தான் பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்திருக்கா.

கண்ணாம்மாவின் அம்மா இறந்துவிட, ரெண்டாவது தாரமா அப்பாவுக்கு சித்தி வந்து, அவங்களுக்கு அஞ்சலின்னு அழகா ஒரு பெண்ணும் பிறக்கறா

கண்ணம்மா கருப்பு என்பதனால் சித்தி மட்டுமில்லை, சித்திக்குப் பிறந்த பெண், சித்தியின் அம்மா பாட்டி எல்லாரும் அவளை வெறுக்கறாங்க.

அழகி அஞ்சலி

அழகி அஞ்சலி

மிஸ் சென்னை பட்டம் வாங்கிய அஞ்சலியை அதாவது கண்ணம்மாவின் சித்தி பெண்ணை, பணக்கார சவுந்தர்யா அம்மாவின் இரண்டாவது மகன் அகிலனுக்கு பிடிச்சு போயிருது. அம்மாகிட்ட சொல்ல, அம்மாவுக்கும் கருப்பு பிடிக்காது, அழகு பிடிக்கும். அதனால, அழகி அஞ்சலியை அகிலனுக்கு கல்யாணம் செய்து வைக்க சவுந்தர்யா அம்மா ஏற்பாடு பண்றாங்க. இவங்க ஏழைன்றதால வீடு, கார், செலவுக்கு பணம்னு சகல வசதியும் செய்து தராங்க.

கறுப்பே ஆகாது

கறுப்பே ஆகாது

சவுந்தர்யா அம்மாவுக்கு கறுப்பே ஆகாது. தன் பேத்தி கருப்பா இருக்கான்னு அவளை கிட்ட கூட சேர்ப்பதில்லை சவுந்தர்யா அமமா. இதனால் பெத்த பொண்ணு கூட கோச்சுக்கிட்டு வீட்டுக்கு வர்றதில்லை. இந்த சமயத்துல கண்ணாம்மாவை பார்த்துட்ட சவுந்தர்யா அம்மாவிடம் ,கண்ணம்மா இந்த வீட்டு வேலைக்காரின்னு பொய் சொல்லிடறாங்க. கல்யாணத்துக்குப் பிறகு இவ என் கண்ணுலயே படக் கூடாதுன்னு கட்டளை போட்டுடறாங்க.

கண்ணம்மா பாரதி

கண்ணம்மா பாரதி

பாரதிக்கு கண்ணம்மாவின் குடும்பம் அவளை ஒதுக்குவது பத்தி தெரிஞ்சுருது.இவன் சவுந்தர்யாவின் மூத்த மகன் டாக்டரா இருக்கான். இவனுக்கு கண்ணம்மாவின் குணம் ரொம் பபிடிச்சு போயிருது. அவள் மேல காதலும் வந்துருது... மெதுவாக கண்ணம்மாவின் அப்பாவிடம் இதை பத்தி பேசறான். கண்ணம்மாவின் அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகிடுது. கண்ணம்மா சம்மதம் ரொம்ப முக்கியம் மாமா. எனக்கு குழந்தை பிறக்காது..மத்தபடி தாம்பத்திய வாழ்க்கை வாழலாம் மாமான்னு சொல்றான்.

குறையில்லை இது

குறையில்லை இது

இது ஒரு பெரிய குறை இல்லை...கண்ணம்மாவுக்கு இந்த வீட்டில் இருந்து நல்லபடியா விடுதலை கிடைக்கணும்னா அவளுக்கு இந்த கல்யாணத்தை செய்து வைப்பதுதான் சரின்னு குழந்தை பிறக்காதுன்னு பாரதி சொன்னதை பெண்ணிடம் மறைச்சுடறார். கண்ணம்மாவும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சுடறா. இதுக்கு நடுவுல அஞ்சலி தன்னை விரும்பிய அகிலனை விட்டுட்டு, அண்ணன் பாரதி மேல ஆசைப்படறா. எப்படியாவது பிளேட்டை மாத்தி அத்தையை நம்ப வச்சு உங்களை நான் கல்யாணம் செய்துக்க போறேன்னு சவால் விடறா.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா

பாரதி இதனால் கண்ணம்மாவை அவசரமா கல்யாணம் செய்துக்கறான்.அம்மாவுக்கு பிடிக்கலை. வீட்டில் சேர்க்கலைன்னாலும் வீட்டு வாசற் படியில் குடித்தனம் பண்றாங்க ரெண்டு பேரும். கண்ணம்மா சித்தி, பாட்டி, தங்கச்சி அஞ்சலிக்கு இவளுக்கு இப்படி ஓர் வாழ்க்கையான்னு பொறாமைத் தீயில் வேகறாங்க. மாயனை விட்டு மறுபடியும் பாட்டி கண்ணாம்மாவிடம் கலாட்டா செய்ய சொல்ல...கண்ணம்மாவுக்கு வருது ஆத்திரம்

கண்ணம்மா கோபத்தில்

கண்ணம்மா கோபத்தில்

என்னடி.. ஆம்பளைத் தொட்டத்துக்கு மயங்கி நிக்கிறியான்னு மாயாண்டியுடன் இணைச்சு பேச கோவத்தில் துள்ளிக் குத்திக்கறா கண்ணம்மா... ஏய்... வயசாச்சேன்னு பார்க்கறேன்.. அசிங்கமா பேசாதீங்க...அஞ்சலிக்கும்,, அகிலனுக்கும் பாரதி மாமா மூலமாத்தான் கல்யாணம் பேசலாம்னு இருக்கேன்.. பாட்டிய ஏதாவது செய்ய வச்சு சொதப்பிக்காதீங்கன்னு எச்சரிக்கறா. தன்னைத் தொட்ட மாயனை தள்ளிவிட்டு, கத்தியை கழுத்தில் வச்சு மிரட்டறா.

நான் கருப்பு இதுதான் உண்மை...இந்த கருப்பு கடைசி வரைக்கும் இருக்கும்..என்னடா பண்ண முடியும் உங்களாலன்னு கேட்கறா கண்ணம்மா... இதுதானே பாரதி கண்ட கண்ணம்மா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X