ஆபாசம்.. அருவருப்பு.. பெட் ரூம் காட்சியை காட்டுறாங்க.. பிக்பாஸை விளாசிய நடிகர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமும் அருவருப்பும் தான் உள்ளது என நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் மீரா மிதுன் சேரன் மீது கூறிய குற்றச்சாட்டு, சேரனை சரவணன் தரக்குறைவாக பேசியது, சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த நடிகரான பயில்வான் ரங்கநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அருவருப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் ஆபாசமும் அருவருப்பும் தான் உள்ளது. பதினைந்து பேரை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து கேமராவில் படம் பிடித்து காட்டுகிறார்கள்.

எல்லை மீறிவிட்டது
அடுத்தவர் பெட்ரூமில் கேமராவை வைத்து படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது. பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதில் எல்லையை மீறிவிட்டனர்.

கவினுக்கு சப்போர்ட்
மேலும் ஒருவரை மட்டும்தான் காதலிக்க வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? இரண்டு பெண்களுமே அழகாக இருந்ததால் இரண்டு பேரையும் காதலிக்கிறார் என கவினுக்கு சப்போர்ட் செய்கிறார்.

கவின் செய்வது சரிதான்
மேலும் கவினுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன், காதலியை பார்க்க முடியாத சூழலில் கவின் செய்வது சரிதான் என்றும் தெரிவித்தார்.

அதையே சாக்ஷி செய்கிறார்
பெண்கள் ஒன்று சேர்ந்தாலே புறம் பேசுவதுதான் வேலை. அதையே தான் சாக்ஷியும் செய்கிறார் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











